வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன. 

Read more: தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு- கிழக்கில் காணி மீட்புப் போராட்டங்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலிறுத்தும் போராட்டங்களும் இடைவெளி ஏதுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு சமாந்தரமாக (அரச) வேலை கோரும், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. அவை, குறிப்பிட்டளவு கவனமும் பெற்றிருக்கின்றன. 

Read more: வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும் உணர்நிலையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

“இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டிய தேவையில்லை. போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டியிருந்தால், முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 03, 2017) மேற்கொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்னவுக்கு பக்கத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரும் நின்றிருந்தார். ‘முன்னாள் போராளிகளையும்’ விசாரிக்க வேண்டி வரும் என்கிற விடயத்தை தயா மாஸ்டரை சுட்டிக்காட்டியே அவர் குறிப்பிட்டிருந்தார்.

Read more: முன்னாள் போராளிகளைக் காட்டி தப்பிக்க முயலும் அரசு! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. ‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். 

Read more: ரஜினியின் யாழ். வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு பகுதியினருக்கு ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. மற்றொரு பகுதியினருக்கு அது அரசியற் சுற்றுலா ஆகிவிட்டது. மிகச்சிறிய பகுதியினருக்கே அது அரசியல் அடர்த்தி மிக்க ஒரு பயணமாக காணப்படுகிறது. சில ஆண்டுகளிற்கு முன் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ஜெனீவாவில் அரசியல் தஞ்சம் கோரினார்கள். இம்முறையும் ஒரு கிறிஸ்தவ மதகுரு அரசியல் தஞ்சம் கோரியதாக ஒரு தகவல் உண்டு.

Read more: ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள்! (நிலாந்தன்)

பெப்ரவரி 12ஆம் திகதி யாழ். தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அது பொதுமக்களுக்கான ஓர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. ‘மக்களால் மக்களை ஆட்சி செய்யும் மக்களின் யாழ்ப்பாண மாநகர சபையின் அழிந்த நகர மண்டபத்தை அதன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிரூட்டி எழுப்பி தொலைந்த அந்தக் கோவிலை டாக்டர் சுப்ரமணியம் சிறுவர் பூங்காவின் தோற்றமுள்ள அதே திடலில் இருந்து நிறுவி, யாழ்ப்பாண நகரின் கம்பீரத்தை மீளக்கொண்டுவரும் பல்வேறு கடந்தகால எத்தனங்களின் தொடராக வந்துள்ள பிந்தியதை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள மாநகரசபையினர் நாம் விரும்புகிறோம்….’ 

Read more: ‘யாழ். நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்’ சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன? (நிலாந்தன்)

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. மாசற்ற அரசியலை நோக்கிய ‘மார்ச் 12 இயக்கத்தால்’ அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2015 மார்ச் மாதம் அதாவது ஆட்சி மாற்றத்தின் பின் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் பிரகடனம் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இலங்கையில் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் பவ்ரல் அமைப்பு மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் அடித்தளமாகக் காணப்படுகின்றது. இதில் சர்வோதயம், கியூடெக் உட்பட பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களும் பங்காளிகளாக உள்ளன. 

Read more: ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி வடக்கில் நடந்தவை! (நிலாந்தன்)

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்