சில காட்சிப் பதிவுகள் மனதை உலுக்கிவிடும். தூக்கம் தொலைத்துவிடும். சென்றவாரம்  மனக் கண்ணில் வந்து வந்து சென்று கொண்டிருந்த காட்சிப் பதிவு கேரளாவில் கொல்லப்பட்ட மதுவின் வெறித்த பார்வை. பசி என்ன செய்யும்? மதுவின் தேவை என்ன ?  பசிக்கு உணவு. அந்தப் பசியும், அந்தத் தேவையும்  அவனுக்கு மட்டுமானாதா ?. இந்தக் கேள்வியை உணர்வோடு எழுப்புகிறது வா. மணிகண்டனின் இந்தக் குறிப்பு. அவரது நிசப்தம் வலைப்பதிவிற்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

Read more: பசித்தவனுக்கு..!

ஜெயேந்திரர், தன்னுடைய வாழ்நாளின் பிற்பகுதி முழுக்க எதிர்மறையான கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்ட மதத்தலைவர்.அவருடைய இளம் வயதில் இந்து மதத்தை சீர்த்திருத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்டிருந்தார். முன்னோர் செய்த தவறுகளை நேரடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவை களையப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.

Read more: மாற்றம் விரும்பியவர் ஜெயேந்திரர் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை ‘ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு. அப்படிக் காட்டுவோர் பாலசிங்கம் கூறிய “ரணில் ஒரு நரி” என்ற வாசகத்தையை மேற்கோள் காட்டுவதுண்டு. 2005இல் ரணில் பதவிக்கு வருவததை புலிகள் தடுத்து நிறுத்திய பொழுதும் மேற்படி வாசகம் மேற்கோள் காட்டப்பட்டது. 

Read more: ரணில் ஒரு வலிய சீவன்! (நிலாந்தன்)

தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்தி பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கின்றார்கள். இன்னமும் அதன்படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள். 

Read more: கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

“…வடக்கு கிழக்கில் (வடக்கு கிழக்கிலும்) ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி தமிழ்ப் பரப்பு நகர்கிறது…” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

Read more: தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி ஜனநாயகச் சூழல் உருவாகிறதா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

சிவகாசி வறண்ட பூமி! வானம் பார்த்த பூமியில் பூக்களின் விளைச்சலுக்கு என்ன வேலை? நெருப்பை கருப் பையாக கொண்ட வெடித் தொழில்தான் எங்கு நோக்கினும். இயற்கையின் இந்த ஓர வஞ்சனைக்கு இறைவனே கொடுத்த ‘சாப விமோசனம்’தான் ஸ்ரீதேவி என்கிற பூந்தோட்டம்!

Read more: போய் வா நதியலையே....

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 

1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது.
2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது.
3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன.
4.சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது.

Read more: திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?! (நிலாந்தன்)

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.