பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ''சுதேச நாட்டியம்' எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில், அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக 1946ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாத இதழில் இது தொடர்பாக ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலம். 

Read more: யாழ்ப்பாணம்தான்; வாள்ப்பாணம் இல்லை?! (நிலாந்தன்)

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும், அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 

Read more: தமிழ் ஊடகப் பரப்பும், அகற்றப்பட வேண்டியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. 

Read more: நினைவு கூர்தல் – 2016 (நிலாந்தன்)

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து, இன்றோடு ஏழு ஆண்டுகளாகின்றன. பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில், இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதோடு, வருடங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகின்றன. இழக்கப்பட்ட உயிர்களுக்கும் ஓடிய பெரும் குருதிக்குமான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான நம்பிக்கைகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், ஆயிரக்கணக்கான 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்' குறிப்புக்கள், கட்டுரைகள், பத்திகளுக்கிடையில் இந்தப் பத்தியும் ஓரிடத்தை எடுத்துக் கொள்கின்றது. 

Read more: முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. 

Read more: புலிக்கொடியை முன்னிறுத்திய சண்டைகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழகத்தின் ஆட்சியை ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அதிமுக தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை வெளியான தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி எந்தவித சிக்கலுமின்றி அறுதிப் பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சியமைத்துவிடும் என்பது உறுதியாகிவிட்டது.

Read more: ஜெயாவின் வெற்றி முகமும், திமுகவின் பெரும் சோகமும்! - புருஜோத்தமன் தங்கமயில்

தமிழகச் சட்டசபைக்கான தேர்தல் வரும் 16ந் திகதி நடைபெறவுள்ளது.  தேர்தல் பிரச்சாரங்களின் இறுதிக்கட்டமும், தேர்தல் கணிப்புக்களின் உச்சமும், தமிழகத் தேர்தற் களத்தினைச் சூடாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பொய்யானது.

Read more: தமிழகத் தேர்தல் 2016 : வெற்றி முகம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்