தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது, ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இரண்டாவது, அந்தத் தீர்ப்பின் அடிப்படைகளை முன்வைத்து, பௌத்த பீடங்களுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் நடத்திய சந்திப்புகள். 

"ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் (Mental fetter)"

-கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 

ம.அருளினியன் எழுதிய ‘கேரள டயரீஸ்’ என்கிற நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளியிடப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை வரையில் குறித்த நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நூல் வெளியீட்டுக்காக கல்லூரி மண்டபத்தை வழங்க முடியாது என்று நிகழ்வுக்கு முதல் நாள் அக- புற அழுத்தங்களினால் பாடசாலை நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தது. இதனால், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா, கிட்டத்தட்ட மூடிய அறைக்குள் நடத்தப்பட்டது மாதிரி, நட்சத்திர விடுதியொன்றில் வரையறுக்கப்பட்ட அளவிலான பங்கெடுப்பாளர்களுடன் நடத்தி முடிக்கப்பட்டது. 

கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதியினால் அதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. வடக்கில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெறும் கைதுகள் பற்றியும், புதிய அரசியலமைப்புப் பற்றியும் அவசரமாகப் பேசுவதற்காகவே மைத்திரியிடம் கூட்டமைப்பு நேரம் கேட்டிருந்தது. 

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி அமைப்பது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியினை அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அறிவித்திருக்கின்றார். அத்தோடு, ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை பொது நினைவு தினமாக கொள்ள முடியும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கின்றார். 

“...போராட்ட காலத்தில், குறிப்பாக போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைவும் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அபரிமிதமானது; மெச்சத்தக்கது. தமிழ்ச் சூழலில், அவ்வாறான நிலை அதற்கு முன்னர் இருந்திருக்கவும் இல்லை. எனினும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களிடையே நம்பிக்கையீனமும் முரண்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டி அதிகரித்திருக்கின்றது. ஒருவரிடத்திலோ, சமூகத்திடமோ நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கடந்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் சிறுபகுதி கூட, தற்போது காட்டப்படுவதில்லை. இது சமூகத்தின் தோல்வி நிலைகளில் முக்கியமானது...” என்று, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார். 

கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. அதே நாள் மாலை மேற்படி சந்திப்பில் பங்குபற்றிய அரசியற்கட்டுரை எழுதுபவர்கள் சிலரும், ஓர் ஊடகவியலாளரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார்கள். அச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியவரும் அதில் பங்குபற்றினார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக சந்திப்பு நடந்தது. பலதைப் பற்றியும் உரையாடப்பட்டது. ஒரு மாற்று அணியைக் குறித்தும் உரையாடப்பட்டது. விக்னேஸ்வரன் மிகவும் வெளிப்படையாகப் பேசினார். ஐக்கியத்தைக் குலைப்பது இப்பொழுது நல்லதல்ல என்பதே அவருடைய பதிலின் சாராம்சமாக இருந்தது. 

More Articles ...

Most Read