வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு - கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூட்டமைப்பின் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்கிற தகுதி மாத்திரமே அவருக்கு அங்கிகாரம் பெற்றுக் கொடுத்தது. அதுவே, தமிழ்த் தேசிய அரசியலில் அவர் இன்று அடைந்திருக்கின்ற அடைவின் ஆரம்பமும் தொடர்ச்சியும்! இது முன்கதைச் சுருக்கம்.  

Read more: தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்? (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது. முதலில் அது ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் விழைவாக உருப்பெற்று, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அந்த முரண்பாட்டின் நீட்சியாகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாகியது. ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுகின்றார் என்பதே மேற்படி முரண்பாட்டின் அடிப்படையாக இருந்தது. இதன் விழைவாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கென ஒரு தனிக்கட்சி தேவை என்னும் முடிவுக்கு செல்வநாயகம் வரநேர்ந்தது. இதே செல்வநாயகம் 1968இல் அப்போதிருந்த டட்லி சேனாநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முடிவை எடுத்த போது, அதுவரை தமிழரசு கட்சியின் மூளையாக (தங்க மூளையென்று வர்ணிக்கப்பட்ட) கருதப்பட்ட வி.நவரட்னம் பிரிந்து சென்று சுயாட்சிக் கழகத்தை உருவாக்கினார். 

Read more: விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முன்வருவாரா?! (யதீந்திரா)

சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் உத்தேச சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.  தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தொடர்ந்தும் இயங்கும் பல கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும், அரசியல் ஆய்வாளர்களும், கல்விமான்களும் முக்கிய பேச்சாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர். 

Read more: யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது அதன் நீட்சியைப் பேணுவது தொடர்பிலான முனைப்புக்களில் ஒன்றாக எழுக தமிழைக் கருதுபவர்கள்; அதன் ஆதரவாளர்களாகவும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான காலத்தில் தற்காலிகமாகத் தோற்றம்பெற்ற அரசியல் ஒழுங்கிற்கு ஒட்டுமொத்தமாக இசைவடைந்தவர்கள் எழுக தமிழின் அதிருப்தியாளர்களாகவும் மாறி உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு பெரும் தரப்போ எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.  

Read more: எழுக தமிழ்; வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். '2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை' என்று. அந்த அரங்கு ஒரு  சமநிலையற்ற அரங்கு என்று வடக்கு மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன் விமர்சித்திருந்தார். அந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிருப்தியாளர்களும் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவர்களுமே பங்கேற்றிருந்தபடியால் அந்த மேடை சமநிலையானது அல்ல என்று அவர் அபிப்பிராயப்பட்டிருந்தார். 

Read more: ஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும்! (நிலாந்தன்)

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின் நீண்ட ஏழரை ஆண்டுகளில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு பெருவாரியாக இறங்கிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தல் அரசியலில் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து வந்த மக்கள், பொதுத்தள போராட்ட வடிவங்களினூடு ஒருங்கிணைவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கு ‘எழுக தமிழ்’களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. சுமார் 8,000 பேர் முற்றவெளியில் கூடியிருப்பார்கள்.   

Read more: ‘எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது; எதனைப் பிரதிபலித்தது! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது. 

Read more: எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்! (நிலாந்தன்)

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்