‘ரோஹிங்யா’ இன்றெல்லாம் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி நாம் கடந்துவரவேண்டிய ஒரு சொல். ஜீரணிக்கமுடியாத கொடூர புகைப்படங்களோடு பகிரப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்கள் முழுவதையும் இரத்தத்தால் நிரப்பியிருக்கிறது. இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி சரியான தெளிவின்மையும் அறியாமையும் இன்னும் இன்னும் இந்த தீவிர சமூகவலைத்தள பகிர்வுகளுக்கும் இனத்துவேச வார்த்தைகளுக்கும் வழிகோலுகின்றன. இதைப்பற்றி கொஞ்சம் அலசவேண்டும் என காத்திருந்த எனக்கு இன்று நேரம் வழிவிட்டுக்கொடுத்திருக்கிறது. 

Read more: ரோஹிங்யாக்கள் என்னும் மனிதர்கள்! (அமல்ராஜ் பிரான்ஷிஸ்)

அவர்கள் மன்னம்பேரியை
பாலியல் பலாத்காரம் செய்து
அவளை உயிருடன் புதைத்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

Read more: சகோதரி மன்னம்பேரி முதல் வித்தியா வரை...?!

தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 

Read more: ‘இரு தேசிய இனங்கள்; ஒரு நாடு’ தந்தை செல்வாவின் கோட்பாடு! (சீ.வீ.கே.சிவஞானம்)

 

ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரிக்கு ஆதரவாகவே விழும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள மிகச் சாதகமான அம்சம் இது. அதாவது, தமிழ் மக்கள் வாக்களிக்க வந்தால் அதில் பெரும்பாலானவர்கள் அரசுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள் என்பதுதான். 

Read more: தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?! (நிலாந்தன்)

 

கட்டுக் கட்டாக இராணுவ ஆட்டிலெரிகள் வீழ்ந்து வெடித்ததில், தனது மகனையும், கணவனையும் இழந்து விதவையானவர் சிவலிங்கம் மகேஸ்வரி. இறுதி யுத்த ஷெல் தாக்குதலில் தனது ஒரு கையையும் இழந்துவிட்டார். இலங்கையில் ஆயுத மோதல்களில் விதவையான 90,000 பேர் தமது வாழ்வாதாரத்திற்கும், தமது பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கும் உணவு தேடவே கடும் பாடுபட்டு வருகின்றனர்.

Read more: இலங்கை : யுத்தத்தின் விதவைகள் : வீடியோ பதிவு

 

ஊரே சேர்ந்து வடம் பிடித்திழுத்த தேர், தேர்மூட்டியை வந்தடைந்துவிட்டது. ஆம், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கோலாகலங்கள் முடிவடைந்து ஆட்சி, அதிகார பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தலைநகரில் ஆரம்பித்திருக்கின்றன. தமிழர்கள் கடந்த இரண்டு தேர்தல்களில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் வாக்களித்திருக்கிறார்கள். 

Read more: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுள்ள கடப்பாடுகள்! (சிவதாசன் டினேஷன்)

ஜனாதிபதித் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் இது வரையிலும் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்படித்தான். முதலில் தேர்தல் திகதி அறிவிக்கப்படட்டும் என்று சொன்னார்கள். அதன் பின்னர் இரு தரப்பினரதும் தேர்தல் விஞ்ஞானங்கள் வரட்டும் என்றார்கள். இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அதாவது, தேர்தலுக்கு ஏறக்குறைய மூன்று கிழமைகளே இருக்கும் ஒரு பின்னணியில் இரண்டு பெரிய சிறுபான்மைக் கட்சிகளினுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 

Read more: மதில் மேற் பூனை அரசியல்?! (நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்