தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப் –சுரேஷ் அணி) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள். 

Read more: சுரேஷின் அகற்றமும், மாவையின் நோக்கமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் ஆரம்பமாகி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிறைவுக்கு வந்தன. 

Read more: தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும், உணர்த்தியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி, மீண்டுமொரு அரசியல் சதுரங்கத்தை ஆடுவதற்கு தென்னிலங்கை தயாராகின்றது. அதிகாரங்களின் அரசனாக அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பேரரசனாகும் கனவோடு அரசியலமைப்பில் பல திருத்தங்களைச் செய்து நகரந்து கொண்டிருந்த போது, தேர்தல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தப்பட்ட வடு கொஞ்சமும் தணிவதற்கு முன்பே, பொதுத்தேர்தல் களத்தில் இறங்கி அங்கும் சூடுபட்டுக் கொண்டார். இன்றைக்கு முன்னாள் ஜனாதிபதியாக, சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக ஆற்றாமையோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 

Read more: யாருக்கு கை கொடுக்கும் ‘மஹிந்த’ என்கிற அரசியல் கருவி?! (புருஜோத்தமன் தங்கமயில்)

'தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. சிங்கள கடும்போக்கு தளங்களான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட தரப்புக்களோடு கூட கூட்டமைப்பு பேசி வருகின்றது. இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவில் கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருக்கின்றார். 

Read more: ஒற்றையாட்சிக்குள் முடங்குதலா இறுதித் தீர்வு?! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளேயே, அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய முன்வரைவினை வெளியிட்டிருக்கின்றது. பேரவையின் உருவாக்கம் மீதான ஆதரவும் அதிருப்தியும் தமிழ்த் தேசிய உரையாடல் பரப்பில் இருந்து இன்னும் அகலவில்லை. அப்படியான நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வேகத்தில் பேரவை தன்னுடைய முதல் நடவடிக்கையாக அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவினை மக்கள் முன் வைத்திருக்கின்றது. 

Read more: தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் கோருவது என்ன?! (புருஜோத்தமன் தங்கமயில்)

'தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. சிங்கள கடும்போக்கு தளங்களான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட தரப்புக்களோடு கூட கூட்டமைப்பு பேசி வருகின்றது. இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவில் கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருக்கின்றார். 

Read more: ஒற்றையாட்சிக்குள் முடங்குதலா இறுதித் தீர்வு?! (புருஜோத்தமன் தங்கமயில்)

தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அது(வும்)தான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது. 

Read more: இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்