ஜனாதிபதித் தேர்தலை நோக்கி சிறீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும். அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும். தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம். ஆனால் அந்த வெற்றியானது திருமதி. சந்திரிக்காவை அளவுக்கு மிஞ்சி பலப்படுத்தும் ஒன்றாக அமைவதை ரணில் விரும்பமாட்டார். 

Read more: ஜனாதிபதித் தேர்தல்; தமிழ் மக்கள் பார்வையாளர்களா? (நிலாந்தன்)

“சிங்களவர்களே இந்நாட்டில் பெரும்பான்மையினர். பெரும்பான்மையினரின் விருப்பின்றி யாரும் அதிகாரத்திற்கு வரமுடியாது.” - கலபொட ஞானிஸ்ஸார தேரர், 1992. (பொதுபல சேனாவின் ஞானசார தேரர் அல்ல) 

Read more: மஹிந்த எதிர் மைத்திரி: தமிழர்களின் நிலை என்ன? (என்.கே.அஷோக்பரன்)

எதிர்க்கட்சிகளின் கூட்டணி தனது பொது வேட்பாளரை அறிவித்துவிட்டது. முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் முதல்வரைப்போல மைத்திரிபால சிறிசேனாவும் 100 நாள் ஜனாதிபதியாக இருப்பாராம். அதாவது, அவர் 100 நாட்களிற்குரிய ஒரு டம்மிதான். பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடும் என்று ஊகிக்கப்பட்ட திருமதி சந்திரிகா, கரு ஜெயசூரிய, ரணில் போன்றவர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் அளவிற்கு மைத்திரிபால சிறிசேனா நட்சத்திர அந்தஸ்து உடையவர் அல்ல. கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகவும் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பதால் கட்சியை உடைந்து அதிக தொகை அதிருப்தியாளர்களை வெளியில் கொண்டு வரக்கூடியவர் என்ற ஓர் எதிர்பார்ப்பில் அவரைத் தெரிவு செய்திருக்கிறார்கள். 

Read more: வெற்றி வாதத்திற்கு எதிராக வெற்றிவாதம்! (நிலாந்தன்)

2005இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டுரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டுரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான சிந்தனா முறைக்கூடாக அக்கட்டுரை கணித்திருந்தது. அதன்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை விடவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருதையே அந்த இயக்கம் விரும்பும் என்றும் அந்தக் கட்டுரை கூறியிருந்தது. 

Read more: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்? (நிலாந்தன்)

அஞ்சலி செலுத்துதல் அல்லது நினைவு கூருதல் என்பது மரணித்துவிட்ட மனிதர்களின் நினைவுகளையும், ஆற்றல்களையும், சாதனைகளையும் மீட்டிப்பார்ப்பதற்கும், அவர்கள் எங்களில் செலுத்திய தாக்கத்தின் அளவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குமான வழி. இந்த வழி மரணித்துவிட்டவர்கள் மீது நாங்கள் வைத்திருக்கிற அன்பினால் எமக்கு ஏற்பட்டிருக்கிற வலியைக் குறைக்கவும் அதிக நேரங்களில் உதவுகிறது. அதாவது மனதை ஆற்றுப்படுத்திக் கொள்ளலாம். இதுதான், உலகம் பூராவும் மனிதன் மரணித்துவிட்ட மனிதர்களுக்காக செய்வது. ஆக, அஞ்சலி செலுத்துவதோ, நினைவு கூருவதோ மனித மரபில் தொன்றுதொட்டு வருவதுதான். இது அடிப்படை பண்பாடாகவும் கொள்ளப்படுகிறது. 

Read more: அஞ்சலி செலுத்துவது எமது உரிமை!

தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல் அல்ல. பக்கத்து வீட்டுத் தேர்தல்தான் என்பது போன்ற ஒரு மனோ நிலையே அதிகம் தென்படுகின்றது. 

Read more: ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்! (நிலாந்தன்)

அபாய அறிவிப்புக்கள் விடுக்கப்படுவதால் மாத்திரம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்றால், இந்த உலகம் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கும். யுத்த சூனிய வலயம் என்று அறிவித்துவிட்டு அதற்குள்ளேயே குண்டு மழை பொழிவதுதான் நவீன உலகின் போர் தர்மம். எப்போதுமே, அபாய அறிவிப்புக்கள் மாத்திரம் பதியப்படும். அதற்கான அடிப்படைகளைக் பேணுவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்றைக்கும் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. 

Read more: பெரும் அவலம்: மலையகம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்