ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதித்திருந்த தடை தொடர்பில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் திருப்பகரமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது மட்டுமே என்றும் அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா? (நிலாந்தன்)

ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு நீங்கள் உங்களுடைய அபிப்பிராயத்தை கூறவேண்டும் என்று. அதற்குப் புலிகள் இயக்கத் தலைமை பின்வரும் தொனிப்பட பதில் கூறியதாம். 'இப்பொழுது இருப்பது போலவே இருக்கட்டும், அதனால் ஏதும் பிரச்சினையா?' என்று. 

Read more: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்! (நிலாந்தன்)

சீன அதிபர் ஜீ ஜின்பிங் அண்மையில் இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசமுறைப் பயணம் சர்வதேச அளவில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

Read more: இந்து சமுத்திரப் பிராந்தியமும், செஞ்சீனத்தின் ஆதிக்கமும்! (கோவை.நந்தன்)

’என் ஆசையெல்லாம் தி.நகரில் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட், ஒரு மாருதி 800, 25 லட்ச ரூபா பேங்க் பேலன்ஸ், அவ்வளவுதான் ஆரம்பத்தில் என் லட்சியமா இருந்தது. அந்தப் பொருளாதாரக் கனவுகள் எப்பவோ நிறைவேறிடுச்சு. ஆனா, சினிமாவில்… மைல்ஸ் டு கோ!. மனசைத் தொடுற படங்கள், சயின்ஸ் ஃபிக்ஷன் மாதிரியான முயற்சிகள் செய்யணும்னு என் கனவுகள் எக்கச்சக்கமா இருக்கு. ‘அழகிய குயிலே’ போல சாஃப்ட்டான கதையில் என் சினிமா வாழ்க்கை ஆரம்பிச்சிருந்தா, என் பாதை, பயணமே வேற மாதிரி அமைஞ்சிருக்கும். ‘முதல்வன்’ முடிஞ்சதும் கமலுடன் நான் ஆரம்பிக்க இருந்த ‘ரோபோ’ அப்போ சாத்தியப்பட்டிருந்ததுன்னா, வேற சில புதுக் கதவுகள் திறந்திருக்கும். ஹாலிவுட் போல வேர்ல்டு மார்க்கெட்டுக்கு, உலக சினிமானு கொண்டாடப்படற நல்ல முயற்சிகளுக்கு இன்னும் இன்னும் உழைக்க வேண்டிய விஷயங்கள், தேட வேண்டிய திசைகள்னு சாத்தியங்கள் இருக்கு. நான் என் வேலைகளை சின்ஸியரா செய்துட்டே இருக்கேன். எதிர்காலம் எனக்காக என்ன வெச்சுட்டிருக்கோ, பார்க்கலாம்!’ – இயக்குநர் ஷங்கர் – ஆனந்த விகடன் பேட்டி – 22nd October 2006 (சிவாஜி வெளியீட்டுக்குச் சில மாதங்கள் முன்னர்) 

Read more: 'ஜெண்டில்மேன்' முதல் 'ஐ' வரை...! ('கருந்தேள்' ராஜேஸ்)

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கா வினர் அதை முழுக்க முழுக்க தமது கட்சியின் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். ஆனால், மற்றொரு தரப்பினர் அத்தீர்ப்பை அனைத்திந்திய மற்றும் அனைத்துலக பின்னணிக்குள் வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். மூன்றாவது தரப்பினர் அத்தீர்ப்பை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். இதைச் சிறிது விரிவாக பார்க்கலாம். 

Read more: ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பும், ஈழத் தமிழர்களும்! (நிலாந்தன்)

வடக்கு மாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால், மாகாண சபைத் தேர்தலில் வழங்கப்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சிகரமான, வாக்குறுதிகளுக்கூடாகப் பார்க்கும் போதும், கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவும் மேற்கு நாடுகளும் வடக்கு மாகாண சபைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கூடாக பார்க்கும் போதும், குறிப்பாக மே 19க்கு பின்னரான பொதுவான ஈழத் தமிழ் உளவியலுக்கூடாக பார்க்கும் போதும் வடக்கு மாகாண சபையின் ஓராண்டு காலம் என்பது கவனிப்புக்குரியதே. 

Read more: வடக்கு மாகாண சபை ஒரு பதுங்கும் புலியா? (நிலாந்தன்)

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஸ்கொட்டிஷ் மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம்.

Read more: ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை! (நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்