அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படலாம், அரசியலமைப்பின் 18ஆம் சீர்திருத்தத்தின் விளைவாக மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஊகங்கள் அண்மைக்காலமாக பரவலாக எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதியை சட்டரீதியாக இழந்துவிட்டார் என்ற கருத்தை சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் வாயிலாகவும், அதன் பின்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு எழுதிய கட்டுரையின் வாயிலாகவும் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா (சரத் என் சில்வா) தெரிவித்திருக்கிறார். இது சட்ட, அரசியல் வட்டாரங்களில் புதிய வாதப்பொருளொன்றைத் தோற்றுவித்திருக்கிறது. 

Read more: மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? (என்.கே.அஷோக்பரன்)

இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல. ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும், கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வவுனியாவில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் வைத்து இவ்விதமாக அறிவித்திருப்பதை ஒரு வெற்றுக்கோஷமாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது, வரும் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்து அவர் அப்படி அறிவித்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

Read more: தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…! (நிலாந்தன்)

இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஒன்று புலிப்பார்வை, மற்றையது கத்தி. இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் சடுதியானதே. சில வாரங்களுக்கு முன்புவரை முகநூலில் ஒரே அணியில் மிக நெருக்கமாக நின்று எதிர்த்தரப்பை ஈவிரக்கமின்றி தாக்கிய நண்பர்கள், இப்பொழுது ஒருவர் மற்றவரை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

Read more: சீமானும், தமிழ்த் தேசியமும்! ( நிலாந்தன்)

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஓர் ஊடகத்தின் தமிழ் பதிப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி ஊடகம் ஒன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தவிர அநேகமாக வடக்கிலுள்ள ஏனைய எல்லா ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2009 மே மாதத்திற்கு பின் வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட ஒப்பீட்டளவில் பெரிய ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாக இதனைக் கூறலாம். 

Read more: மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்! (நிலாந்தன்)

இந்திய பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13வது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல சலிக்கத் தொடங்கி விட்டார்கள். 

Read more: இராஜதந்திரப் போர் எனப்படுவது; பின்நோக்கிப் பாய்வதல்ல! (நிலாந்தன்)

முன்னாள் இந்திய வெளியூறவு அமைச்சர் நட்வர்சிங் அண்மையில் வெளியிட்டிருக்கும் நூல் சர்ச்சைகளைக் கிளம்பியுள்ளது. ‘ஒரு வாழ்க்கை போதாது’ என்ற தலைப்பிலான அந்த நூலில் ‘சிறிலங்காவின் அவலம்’ என்ற ஓர் அத்தியாயம் உண்டு. அதில், ஈழப் போர் தொடர்பில் அப்போதிருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகளைக் குறித்து நட்வர்சிங் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். ராஜீவ் காந்தி தகுதியான ஆலோசகர்களை தனக்கருகில் வைத்துக்கொள்ளவில்லை என்றும், விடுதலைப் புலிகளைக் குறித்து சரியான மதிப்பீடு இந்தியப் படைத்துறையிடம் இருக்கவில்லை என்றும் முடிவுகளை எடுக்கும் போது ராஜீவ் காந்தி சாகச உணர்வுடன் செயற்பட்டார் என்றும் குறிப்பாக, சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்கும் போது கூட்டுத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக அமைச்சரவைக்குத் தெரியாமலேயே, அவர் முடிவுகளை எடுத்ததாகவும் நட்வர்சிங் கூறுகிறார். சிறிலங்காவின் அவலம் என்ற அத்தியாயத்தை அவர் பின்வருமாறு முடிக்கிறார. ‘‘மிகத் தொடக்கத்திலிருந்தே இலங்கை இனப்பிரச்சினை மிகத் தவறாகக் கையாளப்பட்டதுடன் அது முழு அளவிலான ஒரு தோல்வியாகவும் முடிவடைந்தது…” 

Read more: ஓய்வூதியர்கள் பெற்ற ஞானம்! ( நிலாந்தன்)

ஒரு கலைப் படைப்பை ஒற்றைத் தன்மையுடன் வெறும் கலை ரசனையோடு மட்டுமே பார்க்காமல் அதனுள் இருக்கும் பல்வேறு நுட்பமான பார்வைகளை பன்முகத் தன்மையுடன் அவதானிக்க வேண்டும் என்று புகழ் பெற்ற கலை இலக்கியக் கோட்பாடான பின்நவீனத்துவம் சொல்கிறது. உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தக் கோட்பாட்டை முன் வைத்து தமிழ்ச் சூழலிலும் நவீன தமிழ் படைப்பாளிகளும், நவீனவிமர்சகர்களும் செயல்பட்டார்கள். 

Read more: பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி! (கௌதம சித்தார்த்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்