அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி; சமாதானம்; யுத்த நிறுத்தம்; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள்; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள்; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”. 

Read more: புனிதமிழந்த கோஷங்கள்! (நிலாந்தன்)

“...மனோ கணேசன் தன் முன்னாலுள்ள தடைகளை இம்முறை தாண்டிக் குதித்துவிடுவாரா? கொழும்பு ஒரு தமிழரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்புமா?” என்றொரு கேள்வி அண்மையில் என்னுடைய கொழும்பு நண்பர் ஒருவரால் எழுப்பப்பட்டது. 

Read more: மனோ கணேசன் இம்முறை தடைகளைத் தாண்டிவிடுவாரா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள் .இதில் யாரை நம்புவது?” நான் கேட்டேன் “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”? அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ?” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடிவாக என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டேன். “யாருக்கு வாக்களித்தாலும் யாருமே எங்களுக்கு எதையுமே பெற்றுத் தரப்போவதில்லை” என்று சலிப்போடு சொன்னார். 

Read more: கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா?! (நிலாந்தன்)

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன? அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன? என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையிலேயே இக்கேள்விகள் கேட்கப்படுகின்றன. 

Read more: தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்! (நிலாந்தன்)

“...அனந்தியை கட்சியை விட்டு நீக்கிய உங்களால் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்), ஏன் சுமந்திரனை கட்சியை விட்டு நீக்க முடியவில்லை...” என்றொரு கேள்வி, யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நோக்கி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “…அனந்தியை நீக்கியது தமிழரசுக் கட்சி, சுமந்திரன் விடயமும் அந்தக் கட்சி சார்ந்தது. வேணுமென்றால், தேர்தலில் அவரை மக்கள் தோற்கடிக்கலாம்...” என்றொரு பதிலை வழங்கினார். 

Read more: சுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று சில தினங்களுக்குள்ளேயே நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதானிகளை அழைத்து சந்திப்பொன்றை நடத்தினார். அந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் முதலாளியும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஊடக நிறுவனத்தின் முதலாளி, 2010 முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுகிறார். 

Read more: தமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளினால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்; வாக்குத் திரட்சிக்காக போராடுவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுக்களுக்கும், குழிபறிப்புக்களுக்கும் எதிராக நின்று தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. 

Read more: சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.