முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும், அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 

Read more: தமிழ் ஊடகப் பரப்பும், அகற்றப்பட வேண்டியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. 

Read more: புலிக்கொடியை முன்னிறுத்திய சண்டைகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழகத்தின் ஆட்சியை ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அதிமுக தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை வெளியான தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி எந்தவித சிக்கலுமின்றி அறுதிப் பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சியமைத்துவிடும் என்பது உறுதியாகிவிட்டது.

Read more: ஜெயாவின் வெற்றி முகமும், திமுகவின் பெரும் சோகமும்! - புருஜோத்தமன் தங்கமயில்

தமிழகச் சட்டசபைக்கான தேர்தல் வரும் 16ந் திகதி நடைபெறவுள்ளது.  தேர்தல் பிரச்சாரங்களின் இறுதிக்கட்டமும், தேர்தல் கணிப்புக்களின் உச்சமும், தமிழகத் தேர்தற் களத்தினைச் சூடாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பொய்யானது.

Read more: தமிழகத் தேர்தல் 2016 : வெற்றி முகம்

இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. 

Read more: நினைவு கூர்தல் – 2016 (நிலாந்தன்)

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து, இன்றோடு ஏழு ஆண்டுகளாகின்றன. பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில், இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதோடு, வருடங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகின்றன. இழக்கப்பட்ட உயிர்களுக்கும் ஓடிய பெரும் குருதிக்குமான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான நம்பிக்கைகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், ஆயிரக்கணக்கான 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்' குறிப்புக்கள், கட்டுரைகள், பத்திகளுக்கிடையில் இந்தப் பத்தியும் ஓரிடத்தை எடுத்துக் கொள்கின்றது. 

Read more: முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா?, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது. 

Read more: சங்கரி கூட்டிய புதிய கூட்டணி! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.