மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ்டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை பொலிஸ் தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு. 

Read more: இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல! (நிலாந்தன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான ‘குறைநிரப்பு’ தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும், அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான். இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை, ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது, தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. 

Read more: தமிழரசுக் கட்சியின் சுழியோட்டம்; கூட்டமைப்பின் சிதைவுக் காலம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

 

ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும், அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார்.

Read more: சம்பந்தனின் அரசியலும், திமிரும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கட்டுரையாளர்கள்: புருஜோத்தமன் தங்கமயில் – மதுரி தமிழ்மாறன் - இலங்கை தொடர்பாக தற்சமயம் ஒரு ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ நடவடிக்கையை சர்வதேச சமூகம் கையாள்வதால் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள்/செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் தேக்க நிலையின் விளைவு பற்றி யோசித்ததன் விளைவாகவே இப்பத்தி. 

Read more: தமிழர் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை!

அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில், வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் மாநிலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும், அந்த மாநிலத்தினை முன்னிறுத்தி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களுமே எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கின்றன. 

Read more: வடக்கு மாகாண சபையின் யோசனைகளும், எதிர்வினைகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியல் களம் வழக்கத்துக்கு மாறாக பரபரப்பும், வேகமும் குறைந்து ஏனோதானோ என்கிற நிலையை வெளிப்படுத்துகின்றது. எவ்வளவு அழுத்தங்கள், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் களம் தன்னுடைய இயங்குநிலையை ஒரு வகையான கொதிநிலையில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். ஆனால், தற்போதையை களம் அவ்வாறான நிலைகளிலிருந்து விலகியிருக்கும் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. 

Read more: மடை மாற்றும் தரப்புக்களை உணர்ந்து கொள்ளுதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்கிற நூல் தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும், தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. 

Read more: ஒரு கூர்வாளின் நிழலில்; தமிழினி முன்வைக்கும் அரசியலும், படிப்பினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.