கரும்புச் சாறு எடுக்கும் இயந்திரத்தில் அகப்பட்ட கரும்பின் நிலையும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலையும் ஒன்றுதான். பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால், வாழ்க்கையின் பெரும்பகுதியை வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, சிறைகளில் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள் தமிழ் மக்களிடம் ஏராளம் உண்டு. இன்னமும் அந்தக் கதைகள் தொடரவும் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை உரிமையாளர் ஆகியோரது கைதுகளும் அதனையே உறுதி செய்கின்றன. 

Read more: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதும், தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய இடமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

சமூக வலைத்தளங்களை “பலவீனமானவர்களின் ஆயுதம்” என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்- James Scott கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். 

Read more: ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் முகநூலும் இலங்கைத்தீவும்! (நிலாந்தன்)

போர் வெற்றிக்குப் பின் 2009இலிருந்து இலங்கை அரசாங்கம் அனைத்துலக பாதுகாப்புக் கருத்தரங்குகளை கொழும்பில் நடத்தி வருகிறது. மைத்திரிபால சிறிசேன அரசுத் தலைவராகிய பின்னரும் அக்கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய அவர் இறுமாப்போடு பின்வருமாறு பிரகடனம் செய்தார் “சிறிலங்காவுக்கு இப்போது எதிரிகள் இல்லை” என்று. ஆனால் அப்படியல்ல சிறிலங்காவுக்கு எதிரிகள் உண்டு என்பதைத்தான் உயிர்த்த ஞாயிறு அன்று வெடித்த குண்டுகள் நிரூபித்திருக்கின்றன. போரில் வெற்றி பெற்ற பின் இனி எதிரிகள் இல்லை என்ற முடிவுக்கு ஏன் மைத்திரி வந்தார்? ஏனெனில் அவர் புலிகள் இயக்கத்தை மட்டும் தான் எதிரிகளாகப் பார்த்தாரா? 

Read more: உயிர்த்த ஞாயிறன்று திறக்கப்பட்ட புதிய போர் முனை?! (நிலாந்தன்)

இரு வாரகால அமெரிக்கப் பயணத்தை முடிந்துக் கொண்டு கடந்த வாரம் நாடு திரும்பிய கோட்டாய ராஜபக்ஷ ஒரு வெற்றி வீரனைப் போல விமான நிலையத்தில் வைத்து ஆதரவாளர்களினால் வரவேற்கப்பட்டார். இறுதிப் போரின் இறுதி நாட்களில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, வெற்றிச் செய்தியைக் கேட்பதற்காக பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்கு அண்மித்த வரவேற்பொன்று கோட்டாபயவுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது. 

Read more: கோட்டாவின் இருமுனை வாள்; அவரை பாதுகாக்குமா அறுக்குமா? (புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த நாட்களில், தென் இலங்கை, போர் வெற்றிவாதம் எனும் பெரும் போதையால் தள்ளாடியது. வீதிகளிலும் விகாரைகளிலும் பாற்சோறு பொங்கி பகிர்ந்துண்டு கொண்டாட்டத்தின் எல்லை தாறுமாறாக எகிறியது. ஆனால், அன்றைக்கு தமிழ் மக்களின் மனங்கள் பெருங்கவலையிலும், அலைக்கழிப்பினாலும் நிரம்பியிருந்தது. கொழும்பு உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் தென் இலங்கை நகரங்களில், தமிழர்களை நோக்கி போர் வெற்றிப் போதைக்காரர்களினால் நீட்டப்பட்ட பாற்சோறும், சிவப்பு சம்பலும் பிணங்களையும், அவற்றிலிருந்து வழியும் குருதியை நினைவூட்டின. எந்தவொரு தரப்பிற்கும் அப்படியான நிலையொன்று வரக்கூடாது என்பது, தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அந்த நினைப்பில் இன்றைக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. 

Read more: இது பாற்சோறு பொங்கி மகிழும் நேரமல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்)

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் நடத்தியிருக்கின்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், நாட்டு மக்களைப் பெரும் சோகத்துக்குள்ளும், சந்தேகப் பீதிக்குள்ளும் தள்ளியிருக்கின்றது. 

Read more: உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

நாடு ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. மாகாண சபைத் தேர்தல்களோ, பொதுத் தேர்தலோ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. கடந்த ஆண்டு ஒக்டோபர் சதிப்புரட்சியோடு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட போதும், பாராளுமன்றத்துக்குள்ளும் நீதிமன்றத்தினாலும் சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு செல்லாமல் போனது. அப்போதைய பரபரப்பும் அடங்கியது. இந்த ஆண்டு முழுமையானதொரு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனாலும், ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு தேர்தல்கள் எதுவும் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றாகிவிட்டது. 

Read more: விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் அணிகளின் இழுபறி! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்