முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அரசியல் சதுரங்கத்தில் சில காய்களை வெட்டுவதற்கான முயற்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். 

Read more: சரத் பொன்சேகா: ரணிலின் புதிய போர்க் கருவி! (புருஜோத்தமன் தங்கமயில்)

அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். 'நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும' என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவர் ஒரு மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார். கலை இலக்கியத்தை அனுபவிப்பது தொடர்பான ஒரு மாநாடு அது. அதில் அவர் நல்லிணக்கத்திற்கான செய்தியை தெற்குக்குக் கொண்டு செல்லுமாறு இலக்கியவாதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 'அரசியல்வாதிகளால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது மதத்தலைவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்றோரும் இதில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ற தொனிப்பட அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

Read more: விகாரைகளுக்குள் இருந்து வராத நல்லிணக்கம்! (நிலாந்தன்)

 

"சமஷ்டியை, ஏன் தென்னிலங்கை இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கின்றது?" என்று கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பரொருவர் என்னிடம் கேட்டார். "இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற தமிழ் மக்களின் கோரிக்கை, ஒரு கட்டத்துக்கு மேல் மெல்ல மெல்ல வலுவிழந்தமைக்கான காரணிகளில் ஒன்றுதான், தென்னிலங்கையின் 'சமஷ்டி' எதிர்ப்புக்குமான காரணி." என்றேன். நண்பர் கொஞ்சமாக கண்களைச் சுருக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார். 

Read more: சமஷ்டியும், சர்வதேச விசாரணையும்…. ஊடகப் பரபரப்பும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், ‘தினக்கதிர்’ இணையத்தளத்தின் ஆசிரியருமான இரா.துரைரத்தினம் அண்மையில் ‘சாதி’ வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். 

Read more: மாட்டிக்கொண்ட இரா.துரைரத்தினமும், சாட்டை சுற்றியவர்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

இலங்கைக் கிரிக்கெட்டினை முன்னிறுத்திய அரசியல் உரையாடல்கள், தமிழ் சமூக ஊடகப் பரப்பில் கடந்த சில நாட்களாக மீண்டும் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி, 'ஒரே தேசம்- ஒரே அணி (One Nation- One Team)' என்கிற மகுட வாசகத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழியனுப்பி வைக்கப்பட்டது. அத்தோடு, இலங்கை அணியின் ஆதரவாளர்களில் ஒருபகுதியினர் 'ஒரே தேசம்- ஒரே அணி' என்கிற மகுட வாசகத்தினை தமது ஆதரவு நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக சமூகத் தளங்களில் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் முன்னிறுத்தும் அரசியல் பற்றிய உரையாடல்கள் மீள ஆரம்பித்தன. 

Read more: இலங்கைக் கிரிக்கெட்: தேசம், கோசம், அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார் 'சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது ராஜபக்ஷவே மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அவர் பொதுச்சொத்தைத் தனிச்சொத்தாக்கியது, அதிகாரத்தை தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஏற்றுக் கொள்கிறார்கள். அதேசமயம் அவருடைய ஆட்சிக்காலத்தில் அவரோடிருந்து அவரைப் போல மோசடிகளில் ஈடுபட்ட பலரும் இப்பொழுது புதிய அரசாங்கத்தில் பிரதானிகளாகக் காணப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ராஜபக்ஷ குடும்பத்தித்தின் மீதான எல்லாவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது அதற்குத் தலைமைதாங்கக் கூடியவர்களாக ராஜபக்ஷக்களே பார்க்கப்படுகிறார்கள்.....' என்று. 

Read more: அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும்! (நிலாந்தன்)

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை மீண்டும் ஓர்மத்தோடு ஒரே புள்ளியில் இணைத்து எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி உரிமைப் போராட்டங்களை முன்னொடுக்கும் நோக்கிலானது அல்ல. மாறாக, தங்களுடைய அரசியல் ஆளுமைக் குறைபாட்டையும், பொறுப்பற்ற தனங்களையும் மூடி மறைப்பதற்கானது. ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

Read more: பிரபாகரன்களை உருவாக்குதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.