அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில், வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் மாநிலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும், அந்த மாநிலத்தினை முன்னிறுத்தி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களுமே எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கின்றன. 

Read more: வடக்கு மாகாண சபையின் யோசனைகளும், எதிர்வினைகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

 

ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும், அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார்.

Read more: சம்பந்தனின் அரசியலும், திமிரும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கட்டுரையாளர்கள்: புருஜோத்தமன் தங்கமயில் – மதுரி தமிழ்மாறன் - இலங்கை தொடர்பாக தற்சமயம் ஒரு ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ நடவடிக்கையை சர்வதேச சமூகம் கையாள்வதால் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள்/செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் தேக்க நிலையின் விளைவு பற்றி யோசித்ததன் விளைவாகவே இப்பத்தி. 

Read more: தமிழர் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அரசியல் சதுரங்கத்தில் சில காய்களை வெட்டுவதற்கான முயற்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். 

Read more: சரத் பொன்சேகா: ரணிலின் புதிய போர்க் கருவி! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியல் களம் வழக்கத்துக்கு மாறாக பரபரப்பும், வேகமும் குறைந்து ஏனோதானோ என்கிற நிலையை வெளிப்படுத்துகின்றது. எவ்வளவு அழுத்தங்கள், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் களம் தன்னுடைய இயங்குநிலையை ஒரு வகையான கொதிநிலையில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். ஆனால், தற்போதையை களம் அவ்வாறான நிலைகளிலிருந்து விலகியிருக்கும் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. 

Read more: மடை மாற்றும் தரப்புக்களை உணர்ந்து கொள்ளுதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்கிற நூல் தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும், தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. 

Read more: ஒரு கூர்வாளின் நிழலில்; தமிழினி முன்வைக்கும் அரசியலும், படிப்பினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். 'நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும' என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவர் ஒரு மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார். கலை இலக்கியத்தை அனுபவிப்பது தொடர்பான ஒரு மாநாடு அது. அதில் அவர் நல்லிணக்கத்திற்கான செய்தியை தெற்குக்குக் கொண்டு செல்லுமாறு இலக்கியவாதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 'அரசியல்வாதிகளால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது மதத்தலைவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்றோரும் இதில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ற தொனிப்பட அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

Read more: விகாரைகளுக்குள் இருந்து வராத நல்லிணக்கம்! (நிலாந்தன்)

More Articles ...

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'