இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் இயந்திர மனிதர்களின் உதவி பெறப்படுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது இவ்வாறா ரோபோக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

Read more: இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் இயந்திர மனிதர்கள் !

உயிரிழப்பு ஏதுமின்றி கொரோனா அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது. இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின் உடல்நிலையில் ஏற்கனவே காணப்பட்ட சிக்கல்கள் குறித்து வைத்தியத்துறையினர் விளக்கமளித்து, கொரோனா மரணங்கள் தொடர்பிலான மக்களின் பயத்தினை குறைப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். 

Read more: கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்ஷக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. 

Read more: கொரோனா- தீண்டத்தகாதது! (நிலாந்தன்)

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ். நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் ஓராண்டுக்கு முன் நாட்டில் முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் முக்காடு இடுவது குற்றமாக கருதப்பட்டது. முக்காடு மட்டுமில்லை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அணியும் தலைக் கவசங்களும் சோதிக்கப்பட்டன. முற்றாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்கள் தடை செய்யப்பட்டன. அல்லது முகக் கவசங்களில் கருப்புநிற கண்ணாடி இருந்தால் அது தடுக்கப்பட்டது. கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அதுவும் தடுக்கப்பட்டது. இவ்வளவும் சரியாக ஓராண்டுக்கு முன் நடந்தவை. ஆனால் இப்பொழுது அதே படைத்தரப்பு சொல்கிறது பொது இடங்களில் முகமூடி அணிந்து கொண்டு வராவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று. 

Read more: கொரோனா வைரசும் ஒரு போதகரும்! (நிலாந்தன்)

ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திரச் சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்குப் பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப் பட்டது.

Read more: உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

தமிழ் நாட்டில் சமூகப் பரவல் எனும் மூன்றாம் கட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறது கொரோனா ஆபத்து. பிப்ரவரி 15 முதல் வெளி நாட்டுக்குச் சென்று வந்தவர்களை கண்காணிக்கவும் வீடு வீடாகச் சென்று சோதனையிடவும் அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அரசு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமாக ஈசா யோகா மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் எங்கே ? ஆராய அறிவுறுத்துகின்றார்  வழக்கறிஞர் பாலதண்டாயுதம்.

Read more: ஈசா யோகா மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் எங்கே ?

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலானது. இவ்வாறான நிலை இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என்று தெரிகிறது. 

Read more: கொரோனாவுக்கு எதிராக கை கோர்ப்போம்!

More Articles ...

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'