அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துக்கள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசிய தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கான வாய்ப்புக்களை சூடுபிடிக்கப்போகும் தேர்தல்களுக்கான களம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் தொடங்கி அனைத்து பொதுத் தொடர்பு சாதனங்களும் தேர்தல்களைப் பற்றியே பேசப்போகின்றன. 

Read more: புதிய ஆண்டில் ராஜபக்ஷக்களை எதிர்கொள்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19வது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 

Read more: ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்! (நிலாந்தன்)

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் ஆகிய எனது நண்பர் கைபேசியில் என்னை அழைத்தார். யாழ். புகையிரத நிலையத்தில் ஒரு சுவிட்சலாந்து பெண் ஓவியம் வரைகிறார், வருகிறீர்களா போய் பாப்போம் என்று கேட்டார். 

Read more: யாழ்ப்பாணத்துக்கு நிறந்தீட்டுதல்: யாரால்? யாருக்கு? யாருக்காக?! (நிலாந்தன்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “…சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு, சமஷ்டி பற்றிய யோசனைகள் எதுவுமில்லை. அவர்கள் அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்திக்கிறார்கள்..” என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான, கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். 

Read more: கோட்டாவின் ‘அபிவிருத்தி’ மாயாஜாலம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் மாத்திரம் போட்டியிடாமல், கொழும்புத் தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை, ஒன்றும் புதிதானது இல்லை. கடந்த பொதுத் தேர்தலிலும், அதற்கு முன்னருங்கூட எழுந்த கோரிக்கைதான். ஆனால், இம்முறை கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஆரம்பக் கட்டப் பேச்சுகளை நடத்துமளவுக்குச் சென்றிருக்கின்றன. இதனை, மனோ கணேசன் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். 

Read more: மனோவின் முடிவு என்ன? கொழும்பில் களமிறங்குமா கூட்டமைப்பு?! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி. பெரும்பான்மை சிறுபான்மையினரின் தேவைகளை நசுக்க முயன்றால், ஜனநாயகம் சீர்கெட்டுப் பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும். இலங்கை நீண்ட காலமாக இந்தச் சூழ்நிலையில் இருந்தது, சிறிது காலத்திற்கு முன்பு அது முழுமையான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல முயன்றது. அது தோல்வியுற்றது. அதன் பின்னர் ஜனநாயக சுதந்திரம் நிறுவப்பட்டது. இருப்பினும், அது முழுமையான ஜனநாயகத்தின் தரத்துக்கு மீளவில்லை. 

Read more: இனப்பிரிவுகளைத் தீர்க்காமல் தேசம் முன்னோக்கிச் செல்ல முடியுமா? (ஹர்ஷா குணசேன)

கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு பொறுப்புப் கூறும் தலைவர் என்று. அப்படி என்றால் என்ன? அவர் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறமாட்டார். முஸ்லிம்களுக்கு பொறுப்புக்கூற மாட்டார். அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார். ஐநாவுக்கு பொறுப்புக்கூற மாட்டார். 

Read more: கோட்டா ஐ.நா.வுக்கு பொறுப்புக் கூறுவாரா?! (நிலாந்தன்)

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.