செப்டம்பர் 16ஆம் தேதி எழுக தமிழ் நடக்கவிருக்கிறது. அப்படி ஒருமக்கள் எழுச்சிக்கான எல்லாத் தேவைகளும் உண்டு. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை நடாத்தியிருப்பதால் இம்முறை ஏன் வன்னியில் நடத்தக் கூடாது? என்ற கேள்வியும் உண்டு. ஆனால் முன்னைய எழுக தமிழ்களோடு ஒப்பிடுகையில் இம்முறை ஓர் எழுக தமிழை ஒழுங்குபடுத்துவதில் பின்வரும் சவால்கள் உண்டு. 

Read more: எழுக தமிழுக்குத் தயாராதல்! (நிலாந்தன்)

கடந்த வாரம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரச்சாரத்தை சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமச்சந்திரனும் இருந்தார். முதலாவது எழுக தமிழ் பேரணி, 2016 செப்டம்பரில் நடைபெற்றது. மூன்றாவது எழுக தமிழ் பேரணி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, எழுக தமிழ் போராட்ட வடிவத்துக்கான வரலாறு மூன்று வருடங்கள். ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும், அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்திருக்கின்றது என்பதை கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் இன்றைய பரிதாப நிலையைப் புரிந்து கொள்ள முடியும். 

Read more: தோல்வியின் விளிம்பில் எழுக தமிழ்! (புருஜோத்தமன் தங்கமயில்)

சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்…

“சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி! 

சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர். ஒரு சின்னக் கணக்கு.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்- 15,992,096.
வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்- 12,793,676.
வெற்றிபெறத் தேவையானது- 6,396,839.
தனிச்சிங்கள் வாக்காளர்கள்- 11,302,393.
அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்- 9,041,914.
இந்த வாக்குகளில் 70.74 வீதம்- 6,396,839.
ஆக சிங்கள மக்களின் வாக்குகளில் 70.74 வீத வாக்குகளைப் பெறுகின்ற ஒருவரால் சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று கூட இல்லாமல் ஜனாதிபதி ஆகிவிடமுடியும். இந்தத் தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிப்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்!” 

Read more: தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்? (நிலாந்தன்)

ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய தகவல்களின்படி ஓகஸ்ட் விடுமுறையில் தாயகத்துக்கு வர விரும்பிய புலம்பெயர்ந்த தமிழர்களில் கிட்டத்தட்ட 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமது பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டார்களாம். தாயகத்தில் வாழும் அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இங்கு வரவேண்டாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூரியதாகவும் தெரியவந்தது.

Read more: நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை: ‘காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர் நோக்க…’ (நிலாந்தன்)

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலி முகத்திடல் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க ஒரு நாயகனைப் போல அநுர குமார மேடையேறினார். கிராமத்தில் பிறந்து வளர்ந்து அரசியலுக்கு வந்த ஒருவராக தன்னை அடையாளப்படுத்திப் பேசிய அவர், ‘புதிய பாதையைத் தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்தார். 

Read more: அநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகிறது? (புருஜோத்தமன் தங்கமயில்)

எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ‘ராஜபக்ஷக்கள் எதிர் இன்னொருவர்’ என்கிற நிலையை, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். 

Read more: கோட்டாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகும் ரணில்! (புருஜோத்தமன் தங்கமயில்)

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம், மாகாண முதலமைச்சரின் பரிந்துரைகளுக்கு அமைய மாகாண ஆளுநர், (மாகாண) அமைச்சர்களை நியமிக்க முடியும் என்று வரையறுக்கிறது. 13வது திருத்தச் சட்டம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தினை முதலமைச்சருக்கு வழங்கவில்லை. இதனை, 13வது திருத்தச் சட்டத்தினை சாதாரண ஒருவர் வாசிப்பதனூடாகவே அறிந்து கொள்ள முடியும். அப்படியிருக்க, 13வது திருத்தச் சட்டத்தின் அதிகார எல்லைகள் குறித்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்கு போதிய விளங்கங்கள் இல்லை என்று வாதிட முடியாது. அது அவ்வளவுக்கு எடுபடாது. 

Read more: விக்னேஸ்வரன் வாங்கிய குட்டு! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்