இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. 

Read more: காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி! (நிலாந்தன்)

தேர்தல் அரசியல் என்பது பரமபத (ஏணியும் பாம்பும்) விளையாட்டு போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும், எதிர்த்தரப்புக்களும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காக பாம்புகளாக காத்துக் கொண்டிருக்கும். அப்படியான அச்சுறுத்தலுள்ள தேர்தல் அரசியல் களத்தில் இம்முறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே பரமபதம் ஆடி தமிழரசுக் கட்சி தோற்றுப் போயிருக்கின்றது. கட்சியின் தலைவர், செயலாளர் தொடங்கி கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும் இந்தப் பொதுத் தேர்தலில் படுமோசமாக தோற்றிருக்கிறார்கள். 

Read more: தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" 

Read more: கஜேந்திரன்களின் எதேச்சதிகாரம்; முன்னணியின் சிதைவு? (புருஜோத்தமன் தங்கமயில்)

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கணிசமான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. வெறுமனே 10 ஆசனங்களுடன் அக்கட்சி இப்போது இருக்கிறது. இந்தப் பின்னடைவென்பது திடீரென்று இத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மாத்திரம் கிடையாது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அச்சரிவு சிறிது தென்பட்டிருந்தது, பின்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய சரிவு தென்பட்டிருந்தது. 

Read more: கூட்டமைப்பில் மாற்றங்கள் அவசியம்; ஆனால், எடுத்தோம் – கவிழ்த்தோம் பாணியில் அமையக்கூடாது! (கோபிகிருஷ்ணா கனகலிங்கம்)

இம்முறை தமிழ் மக்கள், கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக வீற்றிருந்தது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள் வெல்ல முடியாது என்றும் மார் தட்டியது. ஒரு தும்புத்தடியை மக்கள் முன்வைத்து அதற்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இறுமாப்போடு இருந்தது. ஆனால் அந்த இறுமாப்பு இந்த முறை சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. மாற்று அணியை சேர்ந்த மூவர் இம்முறை பாராளுமன்றத்துக்கு செல்கின்றார்கள். மாற்று அணியை பொறுத்தவரை இது வெற்றியின் தொடக்கம். தமிழ் அரசியலை பொறுத்தவரை இது மாற்றத்தின் தொடக்கமாக அமையுமா? 

Read more: மாற்று அணிக்கு முன்னாலுள்ள பணி! (நிலாந்தன்)

எண்ணிய முடிதல் வேண்டும் என்றான் பாரதி. எண்ணித் துணி கருமம் என்றார் அய்யன் வள்ளுவர். அதன் வழி எண்ணித் துணிந்த பணியென அமைந்தது 4தமிழ்மீடியா!. 

Read more: எண்ணிய முடிதல் வேண்டும் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015 பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் (ஒரு இலட்சத்து 88 ஆயிரம்) வாக்குகளை இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது. கடந்த பல பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், இம்முறை தமிழர் தேசம் எங்கும் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. ஆனபோதிலும், கூட்டமைப்பு வாக்கிழப்பை சந்தித்திருக்கின்றது. கடந்த பாராளுமன்றத்துக்குள் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு, இம்முறை 10 உறுப்பினர்களோடு செல்கின்றது. 

Read more: குரங்கின் கை பூமாலையான கூட்டமைப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'