உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன. அரசியல் கைதிகளின் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே மேற்படி சந்திப்பில் பங்கு பற்றின. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து வகுக்கப்படும் ஓர் உள்;ராட்சிக் கொள்கையின் பிரகாரம் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளைக் கேட்பது என்று அக்கூட்டத்தில் கதைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு கட்சிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஒரு பொதுக் கொள்கையின் கீழ் அவற்றை ஒன்று திரட்டுவதற்குத் தேவையான பலம் மேற்படி பொது அமைப்புக்களிடம் உண்டா? என்றும் அச் சந்திப்புக்களின் போது கேட்கப்பட்டது. அவ் அமைப்புக்களிடம் மட்டுமல்ல தமிழ் மக்கள் பேரவையிடமும் அப்படிப்பட்ட பலம் இல்லை என்பதைத்தான் அண்மை வாரங்களாக நடப்பவை நிரூபித்திருக்கின்றன. 

Read more: புதிய கூட்டுக்களும் தமிழ் மக்கள் பேரவையின் சிதைவும்! (நிலாந்தன்)

காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. 

Read more: கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு- கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமாக மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி மாவீரர்களின் அர்ப்பணிப்பை ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள். 

Read more: மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் மேடைப் பேச்சுக்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும். கூட்டரசாங்கம் என்பது சுதந்திரக்கட்சியின் பிளவில் இருந்து உருவானதுதான். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கவே உதவும். இது சில சமயங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிடும். 

Read more: உள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்! (நிலாந்தன்)

பாப்பரசரின் மியன்மார், பங்களாதேஷ் விஜயம்

பாப்பரசர் பிரான்ஸிஸ் அண்மையில் மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மியன்மாரில் சிறுபான்மையின முஸ்லீம்களான யோஹிங்கியர்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் மியன்மாருக்கு இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்ததால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

Read more: மியன்மார் இனச் சுத்திகரிப்பு: ஒரு அரசியல் பார்வையும், திரைப்பார்வையும்!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடு ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்கள் சிலவும் இணைந்து புதிய தேர்தல் கூட்டணியை அமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியான ஒரு வாரத்துக்குள் இந்தக் கட்சித் தாவல் நிகழ்ந்திருக்கின்றது. 

Read more: தேர்தல் வெற்றிக்கான கட்சித் தாவல்களும் புதிய கூட்டணியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப - தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

Read more: புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்