எதிர்காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார். 

Read more: சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சுரேஷ்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசியலமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’ நிலையில், புதிய அரசியலமைப்புப் பற்றி தமிழ்த் தரப்பு பேசிக்கொண்டிருக்கின்றது. 

Read more: தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

…நீங்களும் உங்களது குழந்தைகளும் நிம்மதியான சூழலில் வாழ்வதற்காக பெரும் தியாகம் செய்த பத்தாயிரம் இளைஞர்கள் (படை வீரர்கள்) இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நினைவு கூருங்கள். அவர்களது தியாகத்தை மனதில் நிறுத்திக்கொண்டு விகாரைகளுக்கு செல்லுங்கள். உங்களது ஊரிலுள்ள முக்கிய நபர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் சொல்லுங்கள், அழுத்தம் வழங்குங்கள், புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கக்கூடிய நபர்களிடம் அதனை எதிர்க்குமாறு கூறுங்கள். 

Read more: விகாரைகளுக்குள் தக்க வைக்கப்படும் அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார். 

Read more: அரசியல் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்?! (நிலாந்தன்)

“…நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடுக்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது…. விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றை மட்டும் பிரதிநிதிப்படுத்துவது போலவும் ஏனைய சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டது போலவும் ஒரு தோற்றம் உருவாகி விடும்….” 

Read more: ஐ.நா., இலங்கை அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா?! (நிலாந்தன்)

“புறக்கணிப்புக்கள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில் தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்.” 

Read more: மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசியலமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. 

Read more: கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்? (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்