யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இம்மாதம் மூன்றாம் திகதியிலிருந்து பதினோராம் திகதி வரை ஓர் ஒளிப்படக் காட்சியோடு ஒரு விவரணப்படமும் திரையிடப்பட்டது. ஒளிப்படங்கள் ஸ்டீபன் சாம்பியனுடையவை. விவரணப்படத்தின் பெயர் குடில். தயாரித்தவர் கண்ணன் அருணாசலம். 

Read more: நாளை எழுக தமிழ்! (நிலாந்தன்)

மூன்றாவது எழுக தமிழ்ப் போராட்டத்தில் மக்களைப் பங்கெடுக்கக் கோரும் பத்திரிகை விளம்பரங்கள் கடந்த வாரம் வெளியாகியிருந்தன. எதிர்வரும் 16ஆம் திகதி, யாழ். முற்றவெளியை நோக்கி தமிழ் மக்கள் திரள வேண்டும் என்று அந்த விளம்பரங்கள் கோருகின்றன. அந்த விளம்பரங்களை முன்வைத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசியல் நையாண்டிப் பதிவுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றுக்கு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் பேரவையும், அதன் இணைச் சக்திகளும் வந்துவிட்டதாக குறை கூறப்படுகின்றது. 

Read more: போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி? (புருஜோத்தமன் தங்கமயில்)

தென் இலங்கை அரசியல் ஒழுங்கும், அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும் தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் கருதியதில்லை. சர்வதேச ரீதியில் தென் இலங்கை நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம், ஒரு ஆபத்பண்டவராக ரணில் செயற்பட்டிருக்கிறார்; காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும், அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ‘ஒற்றை’ ஆட்சியாளராக கொள்வதற்கு தென் இலங்கை ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. அப்படிப்பட்ட நிலையில், உண்மையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விரும்புகிறாரா? என்றொரு கேள்வி பல தரப்புக்களினாலும் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றது. 

Read more: அதிகாரத்துக்கான ரணிலின் இறுதிப் போர்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த வாரம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரச்சாரத்தை சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமச்சந்திரனும் இருந்தார். முதலாவது எழுக தமிழ் பேரணி, 2016 செப்டம்பரில் நடைபெற்றது. மூன்றாவது எழுக தமிழ் பேரணி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, எழுக தமிழ் போராட்ட வடிவத்துக்கான வரலாறு மூன்று வருடங்கள். ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும், அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்திருக்கின்றது என்பதை கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் இன்றைய பரிதாப நிலையைப் புரிந்து கொள்ள முடியும். 

Read more: தோல்வியின் விளிம்பில் எழுக தமிழ்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் மற்றொரு எழுக தமிழுக்கு தயாராகி வருகிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியமுடிகிறது. தாயகத்தில் நடக்கும் எழுக தமிழுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இதில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு நல்ல விடயம். தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பெருந்திரள் ஆகிறார்களோ அந்தளவுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். 

Read more: எழுக தமிழ் ஏன்? (நிலாந்தன்)

செப்டம்பர் 16ஆம் தேதி எழுக தமிழ் நடக்கவிருக்கிறது. அப்படி ஒருமக்கள் எழுச்சிக்கான எல்லாத் தேவைகளும் உண்டு. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை நடாத்தியிருப்பதால் இம்முறை ஏன் வன்னியில் நடத்தக் கூடாது? என்ற கேள்வியும் உண்டு. ஆனால் முன்னைய எழுக தமிழ்களோடு ஒப்பிடுகையில் இம்முறை ஓர் எழுக தமிழை ஒழுங்குபடுத்துவதில் பின்வரும் சவால்கள் உண்டு. 

Read more: எழுக தமிழுக்குத் தயாராதல்! (நிலாந்தன்)

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலி முகத்திடல் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க ஒரு நாயகனைப் போல அநுர குமார மேடையேறினார். கிராமத்தில் பிறந்து வளர்ந்து அரசியலுக்கு வந்த ஒருவராக தன்னை அடையாளப்படுத்திப் பேசிய அவர், ‘புதிய பாதையைத் தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்தார். 

Read more: அநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகிறது? (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.