கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஒத்துழைப்போடு தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார். 

Read more: வாள் வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

ஜூலை 29, 1987 என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான நாள். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் கொழும்பு நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அதில் வாக்குறுதி அளித்திருந்தது.

Read more: ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது? (எம்.ஏ.சுமந்திரன்)

கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை கக்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சிறுமழையை நம்பி விவசாயத்துக்கான பெரும் ஏற்பாடுகளைச் செய்யும் தொழிலாளியை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? 

Read more: மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன. ஆனாலும், அந்த அறிவிப்பு சற்றுத் தாமதமாக, குறிப்பாக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகவிருந்த தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது, இரா.சம்பந்தனின் பெரும் கனவொன்றின் மீது கற்களை வீசியிருக்கின்றன. 

Read more: இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய ‘கடவுளிடம் கேளுங்கள்’ என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட அளவிற்கு சம்பந்தரின் உரை கவனிக்கப்படவில்லை. அந்த உரையில் அவர் கூறியவை புதியவை அல்ல. கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்?’ கருத்தரங்கில் அவர் தெரிவித்தவற்றின் விரிவாக்கமே அந்த உரை. குறிப்பாக பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்ட பின்னிருந்து அதிலும் குறிப்பாக யாப்புருவாக்கப் பணிகளில் கூட்டமைப்பு ஒரு பங்காளியாக மாறியதிலிருந்து அவர் மேற்கண்டவாறு பேசி வருகின்றார். அவர் பேசியவற்றை ஒரே வரியில் சொன்னால் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சம்பந்தரின் வழி வரைபடம் அதுவெனலாம். அதைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். 

Read more: யாப்புருவாக்கம் பிழைத்தால்; கடவுளிடமா கேட்பது? (நிலாந்தன்)

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ‘தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்?’ என்பது அக்கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே மன்னாரில் ‘தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்?’ என்ற தலைப்பிலும் வவுனியாவில் ‘தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள்? – அடுத்தது என்ன?’ என்ற தலைப்பிலும் இரு கூட்டங்களை மேற்படி அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது. தலைவர்கள் தடம் மாறிய பின்னரும் தமிழ் மக்கள் தடுமாறவில்லை என்ற ஓர் எடுகோளின் அடிப்படையில் அவ்வாறு தடம் மாறாத அல்லது தடுமாறாத தமிழ் மக்களுக்கு தடம் மாறிய தலைவர்கள் தலைமை தாங்கலாமா? என்பதே கடந்த வாரம் நடந்த கூட்டத்தின் தொனிப் பொருளாகும். அதன்படி தடம் மாறாத அல்லது தடுமாறாத ஒரு தலைமையை உருவாக்குவது அந்தத் தலைமையின் கீழ் ஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றும் மேற்படி தலைப்பை விளங்கிக் கொள்ளலாம். 

Read more: ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்? (நிலாந்தன்)

கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை?’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது. 

Read more: பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? (நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்