முற்றம்

இரண்டாம் ஆண்டின் ஒருமாத தொழில்முறை பயிற்சிக்காக பிரபல விளம்பரத்துறை நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன். அதிஷ்டவசமாக எனது வகுப்பு தோழியும் இணைந்திருந்த அலுவலகத்தில் இருவரும் அருகருகே அமர்ந்த நிலையில் பணி.

அவ்வப்போது மும்மூரமான வேலை. அவ்வப்போது நேரம் கடத்தல் என செல்கிறது எமது "தொழில்". தொழில்முறை பயிற்சி என்பதாலும் இதுவும் நாம் கற்கும் கல்வியின் ஒரு பகுதி என்பதால் பெரிதாக ஒரு வேலையும் கிடையாது (கிடைக்காது). ஆனால் அனுபவம் தரும் சுகம் தனிதான். மனிதன் கற்றுபெரும் கல்வியை விட அனுபவக்கல்வி தரும் பாடம் மிகப்பெரியது என நான் நம்புகிறேன். அதுவும் நாமாகதான் பெறவேண்டும். சிலநேரம் தானகவே கிடைக்கும்.

அப்படி ஒரு புது அனுபவம் பெற்றதில் சற்று அல்லாடிதான் போனோம். விளம்பர நிறுவனம் என்பதால் பலவகையான விளம்பரங்களை உருவாக்கி பல்வேறு அனுகு முறைகளில் அதனை தயாரித்து அளிக்கிறது.

அதில் வானொலி குரல் வழி விளம்பர பணியும் இவர்களுடையது என அன்றே தெரிந்து கொண்டேன். வீட்டில் எப்போதும் வனொலியும் "காதுமாக" இருக்கும் நான் குறிப்பிட்ட வனொலியின் அனைத்து குரல்களுக்கும் விளம்பரங்களுக்கும் பழக்கமாகியிருந்தேன். குரல் கொடுக்கும் பணி எப்படியானது எவ்வாறு செய்கிறார்கள் என்பதில் ஆர்வமாகியும் இருந்தேன். வீட்டில் தனியாக முயற்சிகளும் இடம்பெற்றன!?

என்ன பிரச்சனை என்றால் சில இல்லை பலவேளைகளில் நான் கதைப்பது எனக்கு பக்கத்தில் நிற்பவருக்கு கேட்காது, ஒவ்வொரு வாக்கியமும் இரண்டு மூன்று தடவைகள் சொல்லவேண்டி வரும். ஏன் எனக்கே கூட கேட்காது. சத்தமாக கதைக்க வராது என்று இல்லை ஆனால் என்ன பிரச்சனை என்ற ஆராய்ச்சியை தொடங்கியிருக்கிறேன்.

இது இப்படி இருக்க "வாங்களேன் டம்மி குரல் கொடுக்க இரண்டு பெண் குரல்கள் தேவைப்படுகிறது "சும்மா" தானே இருக்கிறீர்கள் வாருங்கோ" என அலுவலக நண்பர் அழைக்க தயங்கித்தயங்கித் புறப்பட்டோம். மதிய வேளை உணவையும் துறந்து பறந்தது முச்சக்கரவண்டி.

3m ஸ்டியோ அதன் பெயர். எதிர்பார்க்கவில்லை கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் காத்திருந்தோம் எமது குரலைகொடுப்பதற்கு ஏனனில் அங்கு ஏற்கனவே மூவர் குரல் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அது வேறோரு விளம்பரத்திற்காக சகோதர மொழியில் முழங்கிக்கொண்டிருந்தனர்.

அனைத்துமே வானொலி குரல் வழி விளம்பரத்திற்கானவை. மூன்றும் வெவ்வேறு தொனியில் சுரத்தில் ஒலித்தன. அக்குரல்கள் ஏற்கனவே வானொலிகளில் கேட்டவைகளாகவும் இருந்தன. நானும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், வயிற்றை இருக்க கட்டிக்கொண்டோம்.

வயதில் முதிர்ந்தவரின் குரலில் ஒலித்த அந்த விளம்பரத்தில் அவரின் கம்பீரம் மிளிர்ந்தது. இத்துறையில் மிகுந்த அனுபவசாலியாக தென்பட்ட அவரின் அறிமுகம் எங்களுக்கு நறுமணமாக இருந்தது. இருவரின் பெயர்களை கேட்டறிந்து கொண்ட அவர் நான் தமிழ் என்றதும் தமிழில் உரையாட ஆரம்பித்தார். சகோதர மொழிக்காரரான அவர் தமிழ் சொற்கள் சிலவற்றையும் அதன் அசைவுகளையும் தெரிந்து வைத்திருப்பதாக கூறினார். அவரின் தந்தை அக்காலத்தில் தோட்டப்புர மருத்துவராக இருந்ததாகவும் அதனூடாக தமிழில் கதைக்கும் வழியினை தமிழ்மக்களிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் எவ்வாறு குரலை ஏற்ற தாழ்வாக தொனி மற்றும் சுரமாக கொடுக்கவேண்டும் என உதாரண விளக்கமும் தந்தார். ப(சி)ரிதவித்து போய் இருந்த எங்களுக்கு சற்று உற்சாக பானம் ஏற்றப்பட்டது.

ஒருவழியாக மற்றுமொரு அலுவலக பணியாளரும் வந்து சேர எங்களுக்கு நல்ல காலம் வந்தது. எங்களின் விளம்பர உரையாடல் அம்மா, மகன், தங்கை என மூன்று கதாபாத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. சிறு நகைச்சுவையாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்திருந்த அந்த விளம்பர உரையாடலில் தங்கை பாத்திரம் எனக்கு அளிக்கப்பட்டது. அதிலும் என்ன விஷேசமெனில் இரு வாக்கியங்களில் ஒன்று இரகசியக்குரலில் பேசவேண்டும். மற்றது மூன்றே சொற்கள்தான். அட என்னவொரு அதிஷ்டம். சத்தமாக பேசவேண்டிய அவசியமே இல்லை. தெரிந்தே தந்திருப்பார்களோ!? அந்த வகையில் நானும் தோழியும் மற்றவரும் உள்ளே ஒலிவாங்கி அறைக்குள் நுழைந்தோம். வெளிச்சத்தம் கேட்காத அந்த அறைக்குள் கதைக்க ஆரம்பித்தோம். இந்தி.....உஸ்ஸ் மன்னிக்கவும், முதன்ன்ன்.. முதலாக எனதுது வரலாற்றில்ல்ல் பேசிய இரண்டு வாக்கியங்கள் உங்கள் வானொலியில் கேட்டத்தவாறதீர்கள். அடச்சே இது வெரும் டம்மி குரல்கள் வாடிக்கையாளருக்கு காண்பிப்பதற்காக பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அறையை விட்டு வெளியே வந்த நாம் ஆனந்தபரவசமடைந்தோம். எனது குரலை பெரிய ஒலிப்பெருக்கிகளில் கேட்க நல்லாத்தான் இருந்தது. என்ன ஒன்று என்னை மட்டும் மீண்டும் ஒருமுறை தனியே குரல் கொடுக்க சொன்னார்கள். அதுவும் அந்த இரகசிய குரல் வாக்கியத்தை மட்டும். ஏன் என்றால் அந்த இரகசியக்குரலை சத்தமாக பேசிவிட்டேனாம்!

ஹரிணி சிவா

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.