முற்றம்

இம்மாதம் மகளீர் தினம் வந்தபோது முழுமையாக என்னால் அதை உணர முடியவில்ல. சாதனைப்பெண்களாக உருவெடுத்தவர்கள் உலகளவில் போற்றப்பட்டும் பராட்டப்பட்டும், பெண்களில் எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் சிலவேளை உணர்ந்திருக்கலாம்.

ஆனால் பெண்களுக்கான சுதந்திரம் என்பதை விட பெண் இன்னமும் எவ்வாறு பார்க்கப்படுகிறாள், அவளுக்கான முழுமையான பாதுகாப்பு என்ன என்பதை அண்மையில் என் தோழிக்கு நிகழ்ந்த சம்பவத்தின் மூலம் அழமாக உணர்ந்தேன்.

என் தோழி அன்றாடம் வகுப்புக்கு தொலைவிலிருந்து இரண்டு பேருந்துகள் ஏறி வருவபவள். அந்தப்பயணம் எப்போதும் நல்லதாக இருப்பதில்லை. சிலநேரம் பேருந்துக்குள் கூட்ட நெருசல், வாகன நெருசல், பேருந்து பழுது என ஏதாவது இடையூராக அமையும். அன்றைய தினம் இவை அனைத்தையும் விட உச்சம் பெற்ற சம்பவம்தான் அச்சமே.

மதிய நேர வகுப்புக்குல் தாமதமாக பிரவேசித்தாள் தோழி. என்ன என்று கேட்பதற்குல் கையிலிருந்த கைப்பேசியை மேசை மீது போட்டாள். பெரிய ஒலியை அது எழுப்பியதால் வகுப்பிலிருந்த சக மாணவர்கள் அனைவரும் திரும்பினர். ஆவேசம் கண்களில் மிளிர "ஒருவனை பேருந்தில் குத்திவிட்டேன்" என்றாள். "என்ன????" - முழுக்கதையையும் ஒப்புவிக்க கண்முன்னால் நடந்த காட்சிகள் வரத்தொடங்கின. நடந்தது இதுதான்.

வழமைபோல இரண்டாவது பேருந்தை எடுத்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு நேர் பின் இருக்கையில் இருந்தவன் கையை அவளின் இடுப்பிற்கு நீட்டிவிட்டான். என்ன செய்வாள், நாம்தான் என்ன செய்வோம்? அமைதியாக சகித்துக்கொள்வமா?!

ஆனால் அவள் பெரும் ஆத்திரத்தோடு எழும்பி அவன் மூக்கில் ஒரே குத்துதான். ஏற்கனவே கராத்தே பயிற்சிப்பெற்றவளின் குத்து அவனை தள்ளாட வைத்தது. அவன் பக்கத்தில் இருந்த பெரியவர் இதை கவனித்ததுடன் அவனுக்கு ஓர் பலார் விட்டு பேருந்தை நிறுத்தினார். (அவர் ஒருவர்தான் உதவினார்) நல்லவேளை காவல் நிலையத்தை அண்மித்த பகுதி என்பதால் உடனே அவனை அங்கே இழுத்துச்சென்று ஒப்படைத்தார் அந்த பெரியவர். அதே பேருந்தில் மீண்டும் ஏறி வந்த என் தோழியை அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். அவளின் தைரியத்திற்காகவா அல்லது இதற்கு பின் என்ன நடக்கும் என பயத்திலா அந்த விழிகள் பதிந்தன தெரியவில்லை?

ஏன் இக்காலத்தில் பெண்களின் நிலை இது? பெண் சமூகம் இன்னமும் தனக்கான முழுமையான பாதுகாப்பை அடைந்ததில் கேள்விக்குறிதான் நிலவுகிறது.அவளின் தைரியத்தை எண்ணி வகுப்பிலிருந்த அனைவரும் பாராட்டினோம் பெருமைப் பட்டோம். ஆனால் சில சக தோழிகள் இப்படி ஒரு சம்பவம் எனில் பயந்து சகித்துக்கொண்டுதான் இருந்திருப்போம் என்றனர். அப்படியாயின் பெண்களுக்குள்ளே இன்னமும் முழுமையான பாதுகாப்பு என்பதில் அச்சம் பெரிதாகவே உள்ளது.

இந்த சம்பவத்தில் என் தோழியின் தாயார் அவளைப் பாரட்டவில்லை. பயப்படவே செய்தார். மீண்டும் இதே வழியில் செல்கையில் குத்து வாங்கியவன் வரலாம், பழிவாங்கலாம் என போகிறது அவரது அதிகூடிய யோசனை. ஏன் வரட்டுமே மீண்டும் குத்துவதற்கு தெரியாத என்கிறாள் இவள். அவளுக்கு பிந்திய மகளீர் தின வாழ்த்தைத் தெரிவித்தேன்.

இந்த சம்பவம் பலவற்றை உங்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கலாம். இவ்வாறு உங்களுக்கு நடந்திருக்கலாம். ஏன் இன்னமும் எல்லா இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் பெண்களுக்கு அரங்கேறிக்கொண்டே செல்கிறது தவிர குறையவில்லை. இதற்கு சின்னதாக நாம் எதிர்ப்பை காட்டினால் போதும். இதற்கு கராத்தே தெரியவேண்டிய அவசியமில்லை. துணிவிருந்தாலே போதும். குத்தத்தேவையில்லை கூச்சலிடலாம். வெட்கப்படமால் எதிர்ப்பை காட்டுங்கள். நாளடைவில் மாற்றலாம்! சமூகமும் மாறலாம். அப்போது மகளீர் தினத்தை மகளீராக உணருவோம்!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.