முற்றம்

இன்று காதல் பேசும் காதலர் தினம்.

காதல் சமூகச் சீரழிவுக்கானது என்போரும், இல்லை காதல் சமூக மாற்றத்துக்கானது என்பதுமாக வாதங்கள் தொடர்கின்றன.

காதல் வெறுக்கத்தக்கதா..? கொண்டாடத் தக்கதா..? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும், காதல் எதுவெனப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா..? என இன்னொரு புறத்தே எழும் கேள்வியையும் நிராகரிக்க முடியாதிருக்கும்  நிகழ்வுகளும் சமகாலத்தே நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன.

 சிலமாதங்களுக்கு முன் அமிலவீச்சுக்கு உள்ளாகி, முகமிழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் மரணமான விநோதினி தொடர்பான செய்திகளில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த துயரமென ஊடகங்கள் குறிப்பிடுவதை தவறெனச் சுட்டுகின்றார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி.

தான் விரும்பும் பெண், தன்னை விரும்பா நிலையில் வேறு யாருடைய விருப்பத்திற்கும் பாத்திரமாகிவிடக் கூடாது என்ற பழி நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு சம்பவம் எவ்வாறு காதலாகக் கருத முடியும் எனக் கேள்வியெழுப்புகின்றார். நியாம்தான்...

காதல் குறித்த சரியான புரிதல் நம்மிடம் இல்லை அல்லது நமக்குக் காதலிக்கத் தெரியவில்லை.

காதலையும் வீரத்தையும் கொண்டாடியவர்கள் தமிழர்கள் என்கிறது இலக்கியம். காதலைக் கொண்டாடிய சமூகத்தின்  இளைய தலைமுறையிடம்  காதல் குறித்த புரிதல் இல்லை. காதலிக்கத் தெரியவில்லை என்பது முரனாகத் தெரிகிறதே.

ஆம்! காதல் குறித்து  இளைய தமிழ்சமூகம் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. அந்தத் தவறான புரிதலுக்கு இன்றை தமிழ் சினிமாவும் ஒரு காரணம் என்கின்ற வாதமும் வைக்கப்படுகிறது.

சினிமா ஒரு மாயை. அதில் காண்பிக்கப்படுபவை எல்லாம் உண்மையாகிவிடாது என்பதைப் புரிய மறுத்து, உணர்ச்சிவயப்டுதலில் சிக்கிக் கொள்கிறது இளைய சமூகம். அவ்வாறான உணர்ச்சி வயப்பட்ட இளைய தலைமுறைக்கு சினிமா காட்டும் காதல் அபத்தமானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதனை முற்றாக நிராகரிக்கவும் முடியவில்லை.

அப்படியானல் முறையான காதல் எது..? சரியான காதலின் தொடர்ச்சி எதுவாக இருக்கும்..? என்ற கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது, 'காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இல்வாழ்க்கை ' எனும் தமிழ் வரிகள்.

 ' வசனம் எல்லாம் நல்லாருக்கு..வாழ்ந்திருப்போர் யார்..? ' எனக் கேட்கும் இளைய தலைமுறைக்கு வாழும் உதாரணமாக இருக்கும் காதலர் இருவரை இந்தக் கட்டுரை வாயிலாகக் காட்ட விரும்புகின்றோம்.

கருத்தொருமித்த காதலர்களாக, தேடல் மிக்க மனிதர்களாக, தமக்கென வாழாது சமூகத்திற்கென வாழும் மனிதர்களாக, அமைதியான வாழ்வினூடு அளப்பரிய சேவையினையும், வாழ்வின் அர்த்தமிகு தேட்டத்தினையும் செய்து வருகின்றார்கள். இவர்களது சேவையினையும் வாழ்வினையும், இதற்கு முன்னரும் பலர் பதிவு செய்திருக்கின்றார்கள். அவற்றிலிருந்து இது வேறுபடும்.

புத்தகங்களைப் பரிமாறிக் கொள்ளும் தமிழ் சினிமாக் காதலர்களைத் திரையில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இவர்களும் புத்தகங்கள் பரிமாறிக் கொண்ட புத்தகக் காதலர்களே!. இன்றளவும் புத்தகங்கள் மீதான காதலில் கருத்தொருமித்து வாழும் இந்தக் காதலர்களைச் சந்திக்க நீங்கள் எம்மோடு பயணிக்க வேண்டியது தமிழகத்தின் புதுக் கோட்டைக்கு.

 புதுக்கோட்டை!.

சுறுசுறுப்பான ஒரு காலையில், மதுரையிலிருந்து புதுக் கோட்டை சென்று இறங்கினோம். 'பேரூந்து நிலையத்திலிருந்து  ஒரு ஆட்டோ பிடிச்சிட்டுப் போயிடுங்க...' என நண்பர் ஜோதிஜி சொன்ன ஆலோசனையின்படி ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை அணுகி,  'திருக் கோகர்ணம்..போகனும்... " என்றோம்.

 ' போலாமே. திருக்கோகர்ணத்தில எங்க சார்..? '

சொன்னோம்.

பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆட்டோ, நகரின் பரப்பரப்புக்கள் அடங்கிய அமைதியான சூழலுக்குள்  சிலநிமிடம் பயணித்து, அழகான அந்த வீட்டின் முன் நின்றது.

 எதிரே எழிமையும், எழுச்சியுமாக  " ஞானாலயா ! "

85 ஆயிரம் குழந்தைகளுடன், கருத்தொருமித்த காதலர் இருவர் வாழும்  இனிய இல்லம் அதுவென அறிந்திராத நாம், வாசற்கதவினைத் திறந்து உள்நுழைந்தோம்...

 .இன்னும் வரும்...

4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

முகப்பு ஓவியம் நன்றி: மணிவர்மா

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.