முற்றம்
Typography

வலுவற்ற பற்றரி காரணமாக கடந்த ஜனவரி 16ம் நாளிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போயிங் ட்ரீம் லைனர் விமானம், 2013 ஏப்பிரல் 19ம் நாள்,

புதிய பற்றரியுடனான தனது முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை, எதியோப்பிய அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நைரோபி வரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டது! இதை 'ஆகா…" 'ஓகோ…" என்று கொண்டாடிக் குதூகலித்தவர்கள் அமெரிக்க ஃப்பெடரல் அவியேசசன் அற்மினிஸ்ட்ரேசன் மட்டுமல்ல. எதியோப்பிய ஏயார்லைன் முதல் ஆசிய (ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா என்று) விமான நிறுவனங்கள் பலவும் இதைக் கொண்டாடி மகிழ்ந்தன. இந் நாடுகள் எல்லாமே போயிங் க்றீன்லைனர் விமாத்தை ஏற்கனவே கொள்முதல் செய்திருந்தபோதும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பறப்பைக் கைவிட்டு விமான நிலையங்களின் தரையை அலங்கரித்திருந்தன.

புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு, ஆண்டு 2005க்குப் பின் உருவான ஐரோப்பியத் தயாரிப்புக்களான ஏயார் பஸ் ஏ 330, ஏ 380 ஆகிய விமானங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்க போயிங் விமானங்கள்.

ஏயார் பஸ் தொடர்ச்சியாக 16903 கிலோ மீட்டர் தூரம் பறந்தபோது, க்றீன்லைனர் 19800 கி.மீ. தூரத்தைத் தொடர்ந்தது! எடைகுறைந்த மற்றீறியல்களை அதிகளவில் உள்ளடக்கியதால்,இது எரிபொருள் சிக்கனத்தையும் (20வீதம்) நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய வலுவையும் கொண்டிருந்ததாகக் கணிக்கப்பட்ட நிலையில், ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பலவும் இவற்றை வாங்கியதில் வியப்பில்லை!

2008 மேயில் ஆரம்பிக்கப்பட்டு 2009 டிசம்பரில் இதன் தயாரிப்புப் பணிகளை முடித்துக்கொண்டு 2010ல் அதன் பரீட்சார்த்தப் பறப்பை மேற்கொண்டபோது அது தீப்பிடித்ததையடுத்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது! இதையடுத்து இதன் பரீட்சார்த்தப் பறப்பு மீண்டும் 2011 நடுப்பகுதியில் வெற்றகரமாக நிகழ்ந்ததையடுத்து, 2011 அக்டோபர் 26ல் பயணிகளுடனான முதலாவது பறப்பு நிகழ்ந்தேறியது. ஜப்பான் றேய் கோர்னர் நிறுவனம் இவ் விமானத்தை முதலில் வாங்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஏனைய ஆசிய, ஆபிரிக்க நாடுகளும் இவற்றைக் கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டின.

சுமார் மூன்று மாத இடைவெளிக்குப்பின்னான போயிங் ட்ரீம் லைனரின் மீள் பரீட்சார்த்தப் பறப்புப் பற்றி ஆரம்பத்தில் பார்த்தோம்! இங்கு அவதானிக்கப்படவேண்டிய விடயம், டிப்பாச்சர் (புறப்பாடு), அர்றைவல் (சேர்தல்) இரண்;டுமே ஆபிரக்க நாடுகளை மையப்படுத்திய வகையில்தான் நிகழ்ந்திருக்கிறது! இது ஒன்றும் தற்செயலான நிகழ்வல்ல! வெள்ளைநிற மேற்குலக மூளையில் நன்றாகப் பதிந்த விசயம், இவ்வித பரீட்சார்த்தப் பறப்பில் தப்பித்தவறிக்கூட எந்தவொரு வெள்ளையனும் தொற்றிவடக்கூடாது என்பதுதான்!

அமெரிக்காவிலோ அன்றி ஐரோப்பாவிலோ இப் பரிசோதனை முயற்சியை மேற்கொண்டிருந்தால்… வெள்ளையர்கள் இவ் விமானத்தில் ஏறுவதற்கு முற்பட்டிருக்க மாட்டார்கள் என்பது! இப் பரீட்சார்த்தப் பறப்பில் போயிங் விமான நிறுவனத்தின், மார்கெற்றிங் டிப்பார்ற்மென்டின் வைஸ் பிறசிடன்ட் றன்டி றின்செத் அவர்களும் கூடவே பறந்தார் என்பது பரப்புரையாக்கப்பட்டிருக்கிறது! ஆனால் இங்கு கேள்வி… றன்டி றின்செத்தும் சரி, விமான ஓட்டியும் சரி ஆபத்து நிலையில், தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு எவ்வளவு பயிற்சிகளுக்கூடாக தம்மை தயார்ப்படுத்தியிருப்பார்கள் என்பதுதான்?

வெள்ளை நிற மேற்குலகு, புதியவகை மருந்துகளைத் தயாரித்தபோது அதன் பரீட்சார்த்தக் களமாக ஆசிய, ஆபிரிக்க மக்களைப் பயன்படுத்துவது ஒன்றும் இரகசியமல்ல! ஆரம்பகால அணுஉலைக் கழிவுகளை புதைக்கும் இடமாகவும் இதே நாடுகளே பயன்படுத்தப்பட்டன! இன்று வெள்ளை நிற மேற்குலகு அதன் புதிய வகை தொழில் நுட்பங்களைப் பரீட்சிப்பதற்கும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளையே தமது களமாக பயன்படுத்த முற்படுகின்றன என்பதே இங்கு மையக்கரு!

யோகா. ராஜன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்