முற்றம்
Typography

தமிழக முதல்வர் ஜெயலலிதா 100 கோடி செலவில் மதுரையில் பிரமாண்ட சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த அறிவித்தல் பற்றி சமூக தளங்களில் வெளிவந்த சில கருத்துக்களின் தொகுப்பு இங்கே.

இன்னைக்கு இருக்க இளைய தலைமுறைக்கு காந்திய தவிர மீதி யாரு உருவமும் நியாபகம் இருக்க வாய்ப்பு இருக்கதா தெரியலை. நான் என்ன சொல்ல வர்றேன்னா, தமிழன்னைக்கு ஒரு ஃபேஸ்புக் பேஜ், ஒரு கூகுள் ப்ளஸ் பேஸ், ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் எல்லாம் ஓபன் செஞ்சு அதுல ரெகுலரா அப்டேட்ஸ் போட்டுட்டு இருந்தா தான் இளைய தலைமுறையினரின் இதயத்தில் இடம் பிடிக்க முடியும்.

தமிழன்னை யாருன்னு கேள்வி கேட்டா அட்லீஸ்ட் என் எஃப் பி ஃப்ரெண்ட் , என் ட்விட்டர் ஃபாலோயர் அல்லது கூகுள் ப்ளஸ் கூட்டாளின்னாச்சும்  சொல்லுவாய்ங்க. நூறு கோடிய வீணாக்காம உடனே ----- எஃப்.பி, ட்விட்டர் , கூகுள் ப்ளஸ் அக்கவுண்ட்ஸ் ஆரம்பிக்க சொல்லலாம்.  @Joseph Paulraj

மதுரையில் தமிழன்னைக்கு சிலை-முதல்வர் அறிவிப்பு.#வரவேற்க வேண்டிய அறிவிப்பு @ஷர்மி

தமிழ் அன்னை சிலை எங்க  மருதையில் @ramji Yahoo

மாப்ளே போற போக்குல தமிழன்னு ஒரு இனம் இருந்திச்சன்னு கேப்பாங்க போல. இப்படி எதுனா சில வெச்சா அழக்வராச்சி பண்ண தெரியும்ல :( @காசு-பணம்துட்டுmoney

வயசுக்கு வந்த பொண்ணுக படிக்கிற பள்ளிக்கூடத்துல கழிவறை வசதியில்லை ---------திருக்குறளைப் பின்பற்றாத, தமிழைப் படிக்க விரும்பாத நமக்கு என்ன வெங்காயத்துக்கு திருவள்ளுவர் சிலையும், தமிழன்னை சிலையும்! @Kathir Erode

தமிழ்தாய்க்கும் அந்த இரட்டை சிறகுகளை வைத்துவிடாதீர்கள் -----! @ஸ்டைல் பாண்டி

ராமதாசு கைதிலிருந்து தமிழன்னைச் சிலை வரை என் ஸ்டேட்டஸ் ஹிஸ்டரியில் ஒன்றுமே இல்லையே, வரலாற்றின் இருண்ட பக்கங்கள் என்பது இது தானா? @♫ரே♫டு ந♫கர♫ஜன்

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS