முற்றம்
Typography

'இனி வரும் காலம் இளைஞர் காலம் எனப் பாடி,  ஏ.ஆர்.ரஹ்மானை மாத்திரமல்லாது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தனது தனித்துவமான உச்சஸ்தானி குரலில் கொள்ளையடித்த  குட்டிப் பையன் ஆஜித்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட்டிருக்க மாட்டீர்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிச் சுற்றில் ஆஜித் பாடிய போது

கடந்த வருடம், தமிழகத்தின் செல்லக்குரலாக விஜய் டிவியினால் தெரிவு செய்யப்பட்டு சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் வென்ற கையோடு புகழின் உச்சிக்கு சென்றிருந்த அஜீத்தை அதே கையோடு சினிமாவுக்குள் அழைத்துச்சென்றது அவனது உலகம்.

 ஆஜித்திற்கு முதன்முறையாக சினிமாவுக்குள் பாடுவதற்கும் வாய்ப்புக் கொடுத்து நடிக்கவும் வைத்திருக்கிறோம் என பெருமையுடன் கூறிக்கொள்ளும் அப்பாடல் நேற்று இணையத்தில் வெளியானது.

 ஆஜித்தின் 10 வயது திறமையால் கவரப்பட்ட அவனைப் போன்று 10 வயது சிறார்கள் அனைவருக்கும் கலையுலகம் காட்டப்போகும் பாதை இதே போன்றது தானா? எனும் ஆழமான கேள்வியை எழுப்பும் இந்த வீடியோவுக்கு,  பதிலைத் தேடும் முன்னர் ஜஸ்டின் பீர் எனும் ஆஜித்தின் வயதை ஒத்த இன்னுமொரு சிறுவன் தன்னை எப்படி இக்கலையுலகப் பாதையில் கொண்டு செல்கிறான் என்பதனை தொடர்ந்து வாசியுங்கள்.

 கடந்த 2011ம் வருடம் ஏப்ரல் மாதம் ஒரு குறுந்திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டது. With a Piece of Chalk (ஒரு சால்க் துண்டுடன்..) என்பது அதன் பெயர்.  ஜேர்மனியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு மாதங்களாக திட்டமிட்டு, ஆனால்.. மூன்று நாட்களில் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடித்த குறுந்திரைப்படம் அது.  

எப்படி  ஒரு சிறுவன் தனது மிகத்துயரமான வாழ்விலிருந்து நடனம் மூலம் தன்னை விடுவிக்கிறான் என்பது இக்குறுந்திரைப்படத்தின் கதை. இதற்காக  யாரை அந்தச்சிறுவன் கதாபாத்திரத்தில் காண்பிக்கலாம் என  ஆன்லைனில் தேடிய போது,  ஜஸ்டின் பீரை (Justin Beer) தேடிப்பிடித்து அவனது குடும்பத்தினரின் சம்மதத்துடன் குறுந்திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டார்கள்.

With a Piece of Chalk : குறுந்திரைப்படம்

இக்குறுந்திரைப்படம் இணையத்தின் ஊடாக மிகுந்த வரவேற்பை பெறத்தொடங்கியது. ஜஸ்டீன் பீரின் வயதை ஒத்த பல சிறுவர்கள் இந்தக் குறுந்திரைப்படத்தை பார்த்து மிகவும் உற்சாகமடைந்தனர். காரணம் தமது கலை வெளிப்பாடு மாத்திரமே தமது துயர வாழ்விலிருந்து விடுதலை வாங்கித் தரக்கூடியது என உணர்ந்தார்கள்.

 ஜஸ்டீன் பிருக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள்  குவியத்தொடங்கின. ஆனால் இப்பிரபலம் தன்னைக் கட்டிப்போட்டுவிடக்கூடும் எனும் பயம் ஜஸ்டீனுக்கு இருந்திருக்கலாம்.  தனது உண்மையான நடனத்தின் திறன், மிகவும் கடினமான போட்டி ஒன்றின் ஊடாகவே நிரூபிக்கப்படவேண்டும் என  ஹோலந்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற (Everybody Dance Now) எனும் நடனப் போட்டியில் அவன் கலந்து கொண்டான். தனது விடா முயற்சியால் இறுதியில் சாம்பியன் பட்டம் பெற்றான்.  25, 000 யூரோ வென்றான்.  அதை அடுத்த ஆடிஷனுக்கு செலவிடப்போவதாகவும் கூறி சத்தமே இல்லாமல் அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்டான்.

ஜஸ்டின் பீரின் இறுதிச் சுற்று பெர்ஃபோமன்ஸ்

ஜஸ்டின் பீர் வெற்றி பெற்ற தருணமும், செவ்வியும்

இந்த உலகம் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறது என்பதனைக் கூடத் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத சிறுவயதில்,  தமது அசாத்திய திறமையால் மிகப் பிரபலமாகிவிடும் மிக அரிதான சிறுவர்களை அவர்களது எதிர்காலத்தை நோக்கி சரியான பாதையில் வழிநடத்திக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகத்திற்கே இருக்கிறது என்பது  With a Piece of Chalk குறுந்திரைப்படத்தை இயக்கிய அந்த நான்கு இளைஞர்களில் ஒருவர் கூறியது.  ஆனால் அப்பொறுப்பை இந்த சமூகம் கண்டே கொள்ளாது போலும்..!

- சரண்.ஜிவேஷ்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்