முற்றம்
Typography

தாம் பிறந்த பூமியில்;

தங்களது கலாசாரத்தை பாதுகாத்து,

சுதந்திரமாக வாழும் உரிமையை கோரிய
வடக்கு மக்களை சுட்டுக் கொன்றபோது;

விகாரைகளில் சாது நாமம் கூறி
நடுவீதியில் பட்டாசு கொளுத்தி
தெற்கு மக்கள்
விநோதத்தில் மகிழ்ச்சியடைந்தனர்.

(தெற்கில்)தங்களது சொந்த பூமியில்;
பல பரம்பரைகளாக சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்.
நீருக்குள் விஷம் புகுந்ததை அடுத்து,
தாகத்தை தனித்துக் கொள்ள உள்ள உரிமைக்காக
வீதிக்கு இறங்கிய
வெலிவேரிய மக்களுக்கு

தாம் அன்று கைதட்டிய இராணுவத்தினரின் துப்பாக்கியால்
தங்களுடைய இதய உறவுக்காரர் சூடுபட்டபோது;
என்ன நினைத்தாரோ.....?

அன்று கட்டுநாயக்கவில் ரொசென் சானக,
சிலாபத்தில் அந்தோனி பெர்னாண்டோ,
இன்று
வெலிவேரியவில்... நாளை..?


-  சகோதர  சிங்களமொழி ஊடகவியலாளர் ப்ரியன் ஆர் விஜயபண்டார எழுதியது. தமிழ் மொழிபெயர்ப்பு விஜய்

இப்பதிவுடன் தொடர்புடைய செய்தி :

இலங்கையின் தெற்கு கிராமம் ஒன்றில் மக்கள் ஆர்ப்பாட்டம் மீது இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

BLOG COMMENTS POWERED BY DISQUS