முற்றம்
Typography

எப்பொழுதும் எழுதுவதற்கு முடியாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவதற்கான தூண்டுதல் கிடைக்கும் போதேல்லாம் எழுத முடிகிறது.

அண்மையில் அவ்வாறு எழுதத் தூண்டிய விடயம் , தொலைக்காட்சியில் பார்த்த இந் நீயா நானா விவாத நிகழ்ச்சியே!

நானும் ஒரு பெண்தான். ஆனால் பெண்கள்   motivation என்று 1000 காரணங்கள் சொல்ல தெரிந்தவர்களாக இருப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உரிமை என்பது தனி மனிதனுக்கு உரித்தான விடயமென நான் கருதுகிறேன்.பெண்கள் கணவரையோ அண்ணனையோ அழகாக பார்க்க நினைப்பதில் தவறில்லை. ஆனால் அது தோற்றத்தில் தான் தெரிய வேண்டுமா?

 l'abito non fa il monaco என, இத்தாலிய மொழியில் ஒரு பழமொழி இருக்கின்றது. துறவி போல் ஆடை அணிவதால் நீ துறவி ஆகிட முடியாது.  you can't judge a book by its  cover , புத்தகத்தின் உறையை பார்த்து நீ புத்தகதை கணிப்பிடமுடியாது என்கிறது ஆங்கில வாசகமொன்று.

ஆண்கள் செய்வதில் தவறேதும் தெரியவில்லை எனக்கு.  கல்வியாலும் அறிவாலும் திறமையாலும் நாங்கள் வளர்ச்சி (update) அடைந்தால்  போதும் என நான் கருதுகிறேன். மாற்றம் ஒன்று தேவை என்றால் அவர்கள் தங்களுடைய உடல் வடிவமைப்பிற்கேற்ப ஆடை அணியலாம். வெளிநாடொன்றில் இத்துறைசார்ந்து கற்றதன் அடிப்படையில் இதனைச் சொல்கிறேன்.

இந்நிகழ்ச்சியில்  ஆடை விசயத்தில் அடிக்கடி update ஆகனும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு  update ஆவதற்கு நாங்கள் ஒன்னும் கைதொலைப்பேசியும் இல்லை கணணியும் இல்லை.

 

CHANEL  எனும் பிரபல ஆடை தயாரிக்கும் நிறுவனதிற்கான, 2012 / 2013 இன் குளிர்கால ஆடை தேர்வை வடிவமைத்த  Karl Lagerfeld  எனும் ஆடைவடிவமைப்பாளர், தன்  பேட்டிகளின் போது,  இந்தியாவின் கலாச்சாரம் தான் அவருக்கு இத் தேர்வுக்கான தூண்டுதலாக இருந்தது என்றார்.  கால காலமாக வெளி உலகம் மாறினாலும் தங்களுடைய பாரம்பரியத்தை அவர்கள் விட்டதில்லை, இன்னமும் அவர்கள் அவர்களுடைய பாரம்பரிய ஆடைகளை அணிவார்கள் எனத் தான் அவர் கூறியிருப்பதுதான் இதில் பெருமைக்குரிய விடயம்.

இன்னும் இந்தியாவை நேரடியாக பார்த்ததில்லை எனக் கவலைப்பட்டுள்ள  karl lagefeld  ஒருவேளை இந்தியாவிற்கு வந்து, இங்குள்ள நிலையை பார்த்தால் அவர் கற்பனைகள் அழிந்து விடுமோ?

 

 

இப்போது யோசியுங்கள்  ஆடைத்தேர்வில் மேற்குலகை நாங்கள் பின்பற்றி போவது பெருமையா இல்லை, அவர்கள் எம்மைப் பின்பற்றுவது பெருமையா?

4தமிழ்மீடியாவிற்காக :லாவ்யா  Lavvya

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்