முற்றம்

சாதிக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த முண்டாசு கவிஞர், மீசைக் கவிஞர் மகாகவி பாரதியாரின் 132 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 மகாகவி பாரதியார் தமது எழுத்து வலிமை மூலம் சுதந்திர தாகத்தை ஊட்டியவர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்று வலியுறுத்தி வெற்றி கண்டவர். குழந்தைகளுக்கு பாப்பா பாடல்களை பாடி அவர்கள் மனதில்  நீங்க இடம் பெற்ற மாபெரும் கவிஞர் பாரதியார்.

இவர் புதுவையில் வெள்ளையர்களை மிரட்டி  விரட்டி அடிக்கவே அங்கு குடியேறினார் என்று கூட சொல்லப் படுவது உண்டு. அங்கு பரத்தியர் வாழ்ந்த இல்லம் கேட்பாரற்று மூடி கிடப்பதாகவும், போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய அவர் வாழ்ந்த இல்லமும், அவர் தம் நினைவு போக்கிஷங்களான புத்தகங்கள், புகைப்படங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளன என்றும் குமுறும் இலக்கிய பெருந்தகையாளர்கள், புதுவை அரசு பாரதியார் வாழ்ந்த இல்லத்தை சீர்படுத்தி  பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க வேண்டும் என்றும், அங்குள்ள பொக்கிஷங்களை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.