முற்றம்

இன்றைய பொழுதில் எதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானாலும், இணையத்தில் நாடுவது கூகுள் தேடு பொறியைத்தான். பல்வேறு தேடு பொறிகள் வந்துவிட்ட போதிலும் கூகுளுக்கான இடம் முதன்மையாகவுவே உள்ளது. கூகுளில் தேடினால் எதுவும் கிடைக்கும் என்ற பொருளில் கூகுளாண்டவர் எனச் சிலேடையாகச் சொல்லுமளவுக்கு கூகுள் பிரபலமாகியுள்ளது.

1998ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, உருவான கூகிளுக்கு இன்று 21வது பிறந்தநாள். இது தொடர்பாக, இணையத்தில் அதன் தேடல் பக்கத்தில் சிறப்பான டூடுல் ஒன்றினை வெளியிட்டுக் கொண்டாடுகின்றது.

கலிபோர்னியா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களான, லேரி பேஜ் Larry Page, செர்ஜி பிரின் Sergey Brin எனும் இரண்டு ஆய்வு மாணவர்களின் எண்ணத்தில் உருவான இத்தேடு பொறியின் முதற் பெயர் ‘googol'என்பதாகும். "கூகோல்" (googol) என்பதன் பொருள் கணிதத்தின் 1ஜத் தொடர்ந்து வரும் பூச்சியங்களாகும். கணினியில் இதன் முக்கியத்துவம் உணர்ந்து அவர்கள் இப்பெயரினைச் சூட்ட விரும்பிய போதும், ஏற்கனவே இப்பெயரினை ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தமையால் அதனை அவர்களால் வர்த்தகப் பெயராக பதிவு செய்ய முடியாது போனது.

புதிய பெயர் ஒன்றைத் தேடுகையில், பொறியிலாளர் ஒருவர் தவறுதலாகத் தட்டச்சுச் செய்ததில் இருந்து பிறந்ததுதான் புதிய பெயரான google. தவறில் இருந்து தோன்றிய "கூகிள்" என்ற பெயர்சொல் இன்று உலக மொழிகள் மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறியுள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ந் திகதி ஒரு கார்த்தரிப்பிடத்தில் ஆரம்பமான இந்நிறுவனம், அதன் வளர்ச்சியில் இன்று பலகோடிகள் வர்தகப்பரிமாற்றம் செய்யும் உலகின் முக்கிய வர்த்தக நிறுவனமாகவும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும், பலகோடி மக்களுக்கான சேவைத்தளமாகவும் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.