முற்றம்

வசிஷ்ட நாராயண் சிங் . ஒரு காலத்தில் உலகின் உன்னதமான கணிதவியலாளர். உலகின் உயர்ந்த இடங்களிலெல்லாம், மரியாதை மிகுந்த பெருமையோடு வலம் வந்த இந்தியர். வாழ்வின் இறுதிக்காலத்தில் தன்னிலை மறந்த தனியனாகி மறைந்து போனார்.

1942 ஏப்ரல் 2ல் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்புர் கிராமத்தில் லால் பகதுாா் சிங் மற்றும் லகாசோ தேவி ஆகியோாின் மகனாகப் பிறந்தவா் வசிஷ்ட நாராயண் சிங். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து, பாட்னா அறிவியல் கல்லூரியில் கற்கும் போது அவரின் தனித்துவம் மிளிரத் தொடங்கியது. தொடர்ந்து பாட்னா பல்கலைக் கழகத்தின் இரண்டு வருட படிப்பில் பி.எஸ்.சி. (Hons.) கணிதத்தின் முதல் ஆண்டில். அவருடைய சாதனைகள் இன்னமும் தொட முடியவில்லை என்கின்றனர்.

1969 ஆம் ஆண்டில், வசிஷ்ட நாராயண் சிங் தனது Ph.D. பட்டத்தை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெற்றாா். அதன் பிறகு NASA வில் பணியாற்றினார். இதன்போது Appolo விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இணைந்திருந்தாரென்றும், அறியப்படுகிறது. 1973 இல் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய பின், மும்பையிலுள்ள டி. ஐ. எஃப். ஆா் இல் பணியாற்றினாா். 2014 ஆம் ஆண்டில் அவர் மதுபூரில் புபேந்திர நாராயண் மண்டல் பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிாியராக நியமிக்கப்பட்டார்.

1974 ஆம் ஆண்டில் ஏற்பட்ட திருமண பந்தம், அவருக்கு ஏற்பட்ட ஸ்கிசோஃப்ரினியா எனும் நோயால், சில வருடங்களில் முடிந்து போனது. நோயின் தாக்கமும், தனிமை உணர்வும், அந்த மேதையை உருக்குலைக்கத் தொடங்கியது. உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த மேதை, இறுதிக் காலத்தில் தனது கிராமத்தில் அரசாங்கத்திலிருந்து எதுவித உதவியும், கவனிப்பும் இன்றி வாழ்ந்து மடிந்திருக்கிறார்.

வசந்த  காலத்தில் வசிஷ்ட நாராயண் சிங் வகுத்த பெரும் கணிப்புக்களால் உலகம் வியந்தது. ஆனால் அவர் வாழ்க்கைக் கணிப்புக்கள் சோபையிழந்து, சோகம் மிகுந்தது. சென்ற 14ம் திகதி (14.11.2019) அவர் மறைந்த போது, பிரதமரும், மாநில முதல்வரும், பீகாரின் ஐன்ஸ்டீன் மறைந்தார் எனத் துயர் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் இறந்து போன அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வண்டியில்லாது வீதியோரத்தில் நாதியற்றுக் கிடந்திருக்கின்றார் காலம் வஞ்சித்த கணிதமேதை.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'