முற்றம்
Typography

பத்திரிகை, பத்திரிகையாளர் என்ற இரண்டுக்குமிடையே பொருள் வேறுபாடு புரியாமல், பத்திரிகைகளுக்காக துடிக்காதீர் பத்திரிகையாளர்களே என தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் அய்கோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்;

கருணாநிதி (கலைஞர்) வாசகர் வட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசிய பேச்சில் கண்டிக்க வேண்டிய பாகங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, ஹரிஜன் என்ற சொல்லாடல், திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்ற திமிர் வாதம் யாவும் கண்டனத்துக்குரியது. ஆனால், பம்பாய் சிகப்பு விளக்கு பகுதி போல் ஊடகங்கள் செயல்படுவதாக கூறியதை கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், ஊடகங்களின் போக்கு அவ்வாறே இருக்கின்றன.

ஆங்காங்கே சில முதலாளிகள், அவர்களுக்கென ஊடகங்கள், ஊடக வெளிச்சத்தில் அரசியல் மினுக்கல்கள் என ஊடகங்களை கேடயகங்களாக, தங்கள் கருப்பு தொழிலுக்கு கேடயங்களாக வைத்திருப்பவர்களே ஊடகங்கள் என பொருள்படும் ஊடக உரிமையாளர்கள். அதில் பணிபுரியும் நிருபர்கள், வீடியோகிராபர்கள் ஊடகங்கள் அல்ல, ஊடகவியலாளர்கள்.

பத்திரிகை, பத்திரிகையாளர் என்ற இரண்டுக்குமிடையே பொருள் வேறுபாடு புரியாமல் பொதுமக்கள் தான் கொதிக்கிறார்கள் என்றால், ‘பத்திரிகை’யான உரிமையாளர்களுக்கு, பத்திரிகையாளர்களான நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கிராபர்களை கொண்ட சங்கங்கள் துள்ளி குதிப்பதேன்?

சமீபத்தில் தமிழகத்திலும் இந்திய ஒன்றிய அளவிலும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் பணி மறுக்கப்பட்டனர். ஊடகங்களிலிருந்து துரத்தப்பட்டனர். அப்போதல்லவா நாம் துடித்திருக்க வேண்டும்? போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும்?

என்றாவது நமது உரிமை போராட்டத்தை இந்த ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதுண்டா? ஊடகவியலாளர்களாக நடத்தியதுண்டா? உரிய ஊதியம், சலுகை தரும் ஊடகங்கள், பத்திரிககள் எத்தனை? தொழிலாளிகளுக்காக துடியுங்கள், முதலாளிகள் தங்களை பாதுகாத்து கொள்வார்கள். நாயே, பேயே என்று பேசினாலும் நவ துவாரங்களையும் மூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு மூலதனம் முக்கியம். மானமுள்ள பாட்டாளிகள் நாம்தாம் துடிப்போம். நமக்கு மூளை தனம் முக்கியம்.

நடிகர் எஸ்விசேகர் மீது வழக்கு போட்டதற்கு பழி வாங்கியவர்களுக்கு பெயர்தான் ஊடகங்கள். பழிவாங்கப்பட்டவர்கள் ஊடகவியலாளர்கள். தினகரனிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்களை தூக்கியடித்தவர்கள் பத்திரிகை ஆகும். தூக்கியடிக்கப்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள் ஆவர்.

ஆர்.எஸ்.பாரதி தனக்கு சோறு போடும் கலைஞர் டிவியையும் சேர்த்தே சொல்லியதாகவே நாம் பொருள் கொள்ளவேண்டும். அவர்களுக்கு சுய மரியாதை இருக்கிறதா என்றே நாம் கேட்க வேண்டும். மற்றபடி வழக்கம்போல், நம்மிடம் வந்தால் நாம் பார்த்துக்கொள்வோம் வழக்கம்போல்! - எனத் தெரிவிக்கபட்டிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்