முற்றம்

 சில தினங்களுக்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்,  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளான கதிஜா ஒரு நிகழ்ச்சியில் புர்கா ஆடை அணிந்து உடலை முழுவதுமாக மறைத்திருந்தது குறித்து, அதை மதப் பழமைவாதம் எனக் கூறியிருந்தது  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஹ்மான், புர்கா குறித்த தனது கருத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னர் தஸ்லிமா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கதிஜா புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``நான், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை ரொம்ப விரும்புகிறேன். ஆனால், அவரது அன்பான மகளைப் பார்க்கும்போதெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்படுவதைப்போல உணர்றேன். கலாசாரம் மிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள்கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த கதிஜா, ``அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சுத்தமான காற்றை சிறிதுநேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எனக்கு மூச்சுத் திணறலாக இல்லை. மாறாக, பெருமையாகவும் என்னுடைய நடவடிக்கைகளில் உறுதியாகவும் நிற்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஒரு இணைய ஊடகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், இது தொடர்பாக பதிலளித்த அவர், ``ஆண்கள் புர்கா அணியக்கூடாது என்கிறார்கள். இல்லையெனில், நானும் அணிந்திருப்பேன். ஷாப்பிங் சென்று வருவது, நிலையான ஒரு வாழ்க்கையைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றிற்கு எளிதாக இருந்திருக்கும். என்னுடைய மகள் சுதந்திரமாக இருக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால், வீட்டில் வேலை செய்பவர்களின் உறவினர்கள் யாராவது இறந்தால்கூட இறுதிச் சடங்கிற்கு அவள் சென்றுவருகிறாள். சமூகம் சார்ந்த அவளுடைய நடவடிக்கைகள் மற்றும் எளிமை ஆகியவற்றைப் பார்க்க திகைப்பாக இருக்கிறது” என்று கூறி நெகிழ்ந்துவிட்டார்.

கூடவே கதிஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு அளித்த பதிலை குறிப்பிட்டுப் பேசிய ரஹ்மான், ``நஸ்ரினுக்கு பதிலளிக்கும் முன்னர் என்னுடனோ அல்லது குடும்பத்தில் மற்றவர்களுடனோ கதிஜா கலந்தாலோசிக்கவில்லை” என்றும்  பெருமை பொங்க சொன்னவர் ``மதம் சார்ந்த விஷயம் என்பதைவிட, உளவியல் சார்ந்த விஷயம் என்றுதான் நான் இவற்றை நினைக்கிறேன். நமது பிரச்னைகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளும் வகையில் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நம்முடைய செயல்களில் இருந்துதான் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கிறேன். அதில் தேவையானவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.