முற்றம்

மார்ச் 22 ஞாயிறு. இத்தாலியின் லொம்பார்டியா பகுதியிலுள்ள சிரெமோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும், மகிழ்ந்து போகின்றார்கள். தலைமுதல் கால்வரை மூடிய அங்கிகளால் அவர்களது முகங்களின் மலர்சி வெளித்தெரியவில்லை. கைகளின் சைகையில் கடத்திவிட முயற்சிக்கின்றார்கள் தங்கள் மகிழ்ச்சியை.

அதற்கு முதல்நாள் இரவில் வைரஸ் தாக்குதலில் 793 பேர் பலியான செய்தியை அவர்களும் அறிந்திருப்பார்கள். அன்றைய நாளில் என்னாகுமோ என்ற அச்சம் அவர்களுக்கும் இருந்திருக்கும். ஆனாலும் அன்றைய ஞாயிறு அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களது தீவிரசிகிச்சைப் பிரிவில் ஒரு மாதகாலத்திற்குப் பின்னர் ஒரு வைரஸ் நோயாளியின் முதல் கண்விழிப்பை அன்று அவர்கள் கண்டார்கள்.

செய்தியாளர் என்ரிக்கோ கல்லெத்தியிடம் "குழாய்கள் இல்லாத ஒரு நோயாளியைப் பார்ப்பது, அவள் சுயாதீனமாக சுவாசிப்பதைப் பார்ப்பது, விவரிக்க முடியாத உணர்ச்சியாக இருந்தது" என சந்தோஷக் குரலில்  கூறுகின்றார் அந்தப் பிரிவின் தலைவர்.

செரெமோனா மருத்துவமனையில் 52 வயதான மார்கெரிட்டா கண் விழித்த அன்றைய நாள் மிக அழகான நாள். அது அவளுக்கு மட்டுமல்ல அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய அத்தனை பேருக்குமே. ஏனென்றால் கடந்த ஒரு மாதகாலமாக, அந்தப் பிரிவில் செயற்கைச் சுவாசங்களுக்கான குழாய்கள் பொருத்தப்படாத, சுயமாக சுவாசிக்கக் கூடிய எந்தவொரு நோயாளியையும் அவர்கள் காணவில்லை.

" எனக்கு ஒரு பயங்கரமான பயம் நினைவிருக்கிறது. விரைவில் நான் மரணித்திருப்பேன் என்று யாருக்கோ டாக்டர் கூறுவதை காதுகள் கேட்கின்றன. மனம் உள்வாங்கிக் கொள்கிறது. என் கண்கள் மெல்ல மூடுகையில், க்ரேமாவில் உள்ள எனது குடும்பம் நினைவுக்கு வருகிறது. நான் நினைத்துக் கொள்கின்றேன் இறக்கக் கூடாது என்று. பின்னர் இருள்.... இன்றுவரை. மோசமான நிலை இப்போது முடிந்துவிட்டது " எனக் கலக்கமும் களிப்புமாக கூறுகின்றாள், புத்துயிர் பெற்றுக் கண்விழித்த மார்கிரேட்டா.

அந்தத் தீவிர சிகிச்சைப்பிரிவு அறையின் தலைவர் கார்லா மேஸ்ட்ரினி செய்தியாளரிடம் சொல்கின்றார், " ஒரு மருத்துவர் என்னை அழைத்து, தன்னைப் பின்தொடரச் சொன்னார். அவர் என்னை அவள் முன் அழைத்து வந்தார். குழாய்கள் இல்லாமல் ஒரு நோயாளியைப் பார்ப்பது, அவள் சுயாதீனமாக சுவாசிப்பதை என் கண்களால் பார்ப்பது ஒரு விவரிக்க முடியாத உணர்ச்சியாக இருந்தது. கடந்த ஒரு மாதகாலத்தில் அது இங்கு ஒருபோதும் நடக்கவில்லை. எங்கள் வருத்தம், நேற்று வரை, ஒரு நபரை ஒருபோதும் விழித்திருக்காததை காணதுதான். இது உங்களை உள்ளே அழிக்கும் ஒன்று. அவள் கண்வழித்த அந்த காட்சியைக் கண்டதும், அவளுக்கு முன்னால் நாங்கள் அழுதோம், இதன் பொருள் நாங்கள் சாதகமான ஒன்றைச் செய்தோம் என்பதல்ல. ஒரு நோயாளியின் விழிப்பில் மருத்துவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதாகும்."

செரெமோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பி வழிகிறது. ஆனால் மார்கெரித்தாவின் விழிப்பில் மருத்துவமனையும் புத்துயிர் பெறுகிறது. அதன் தலைவர் சொல்கின்றார் " அந்த முதல் விழிப்பு எங்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது " என்று.

நாங்கள் நினைக்கக் கூடும் ஒரு நோயாளியின் விழிப்பு என்பது நோயாளிக்கான மகிழ்ச்சி என்று. ஆனால் உண்மை அதுவல்ல. பேரிடர் வேளைகளிலும், பெரும் போர்களின் போதும், பெருந் தொற்றுக்களின் போதும், பணியாற்றும் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் அடைகின்ற மன உளைச்சல் அளவிட முடியாதது. இடர்களுக்கும், துயர்களுக்கும் பழக்கப்பட்டவர்கள்தான் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தானே !

இத்தாலியச் செய்தியாளர் என்ரிக்கோ கல்லெத்தியின் பதிவொன்றைத் தழுவி தமிழில் : மலைநாடான்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.