முற்றம்

கொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி எல்லோரும் வீட்டில் இருக்கையில் எழக்கூடிய பிரச்சனைகள் பெரும் சிக்கலாகும். அவ்வாறு  வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? எனும் பெருங் கேள்விக்கு முன்னணி உளவியல் மருத்துவர் ருத்ரன் தரும் ஆலோசனை!

வீட்டிலிருக்கும் போதும் கூட, உடன் இருப்பவர்களோடு பேசாமல் செல்பேசியிலேயே காலம் கழித்தவர்களுக்குக் கூட, இந்த மூன்று வார முடக்கம் அவ்வளவு சுலபமாக இருக்காது. இந்த மூன்று வாரத்தில் நாம் பயனுள்ள சுவையான வகைகளில் நம் நேரத்தைச் செலவிடலாம் என்பதே எல்லார்க்கும் முதலில் தோன்றும்.

முதல் வாரம் படம் பார்த்து, படித்து புதியாய் ஏதாவது வீட்டிலிருந்தபடியே செய்வது என்பது ஓரளவுக்குச் சரியாகப் போய்விடும்.

இரண்டாம் வாரம் கொஞ்சம் சலிப்பும் எரிச்சலும் வரும். வீட்டுக்குள்ளேயே ஒருவரையொருவர் குற்றம் காண்பது அதிகரிக்கும். வெளியே போக ஏக்கமும் பரபரப்பும் வரும். இதையும் தாங்கிக் கொள்ளலாம்.

மூன்றாவது வாரத்தில் தளர்வும் சோர்வும் வரும். ஏதும் செய்ய மனத்தில் ஈடுபாடு வராது. பிடித்த காரியங்கள் என்று நாம் நினைத்த படம் பார்ப்பது, இசை கேட்பது கூட அவ்வளவாகச் செய்யத் தோன்றாது. இது depression மனச்சோர்வின் அறிகுறி என்றாலும் இதற்கு உடனடியாய் மனநல மருத்துவ உதவி தேவைப்படாது.

ஆனால், இப்போதைய முடக்கம், இன்றைய உலக நிலவரத்தை நோக்கினால், நான்கு வாரங்களோ ஆறு வாரங்களோ நீடிக்கலாம் என்பதால், மனம் சோர்வடையாமல் இருக்க தினசரிக்கு ஓர் அட்டவணை அவசியம். பிடித்த காரியங்களை முதல் வாரத்திலேயே முழுமூச்சாய் இடைவிடாமல் செய்து சலிப்பதை விட தினமும் இந்த நேரம் படிக்க, இந்த நேரம் படம் பார்க்க என்று ஒதுக்கிக் கொண்டால் நான்கு வாரங்களைக் கடப்பது கடினம் என்றாலும் சாத்தியம்.

மிக மிக முக்கியமாக கரோனா குறித்த செய்திகளையும், பொய்களையும் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து விட்டு அதற்கென்று கொஞ்ச நேரம் மட்டும் ஒதுக்குவது மனநலத்திற்கு உதவும் என்கிறார்  மனநல ஆலோசகர் டாக்டர்.ருத்ரன். இவர் உளவியல் ஆலோசகர் என்பதற்கப்பால் நவீன ஓவியங்கள் படைப்பதிலும் சிறந்தவர்

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.