முற்றம்

அமெச்சூர் மேடை நாடகங்களுக்கு நடுவில் நவீன நாடகங்களுக்கு எப்போதுமே பார்வையாளர்கள் குறைவுதான். ஏனெனில், அவை அனைத்துமே சோதனை முயற்சிகள். ஆனால் நவீன நாடகங்களைக் காணக் காண அவற்றின் உட்புகுந்து நீங்களும் ஒரு நிகழ்த்துக் கலைஞராக உங்களை உணரவைத்துவிடும் வீர்யம் அவற்றுக்கு உண்டு.

இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் தென்னிந்திய மக்கள் நாடக விழாவுக்கு போய்வந்ததும் விதவிதமான பல சோதனை முயற்சி நாடகங்களைக் கண்டதும் நினைவிலாடுகிறது. கடந்த அக்டோபரில் சென்னையில் நடந்த இந்த ஐந்து நாள் நாடக விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரள சமாஜமும் இணைந்து நடத்தின.

நாடகத்திற்கு பார்வையாளர்கள் குறைந்துபோய் விட்டதான குற்றச்சாட்டு அண்மைக் காலமாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. எதிர்பாராத ஆச்சரியமாக அதை உடைக்கும் வண்ணம் அனைத்து நாடகங்களுமே அரங்கு நிறைந்த நிலையில் நிகழ்த்தப்பட்டன. ஏராளமான கலைஞர்கள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், சமூக இயக்கங்கள் சார்ந்தவர்கள் என வித்தியாசமான கலவையானதொரு பார்வையாளர் கூட்டம் இந்நாடக விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து திரண்டிருந்தது. குறிப்பாக பல இளைஞர்களை ஐந்து நாட்களும் காண முடிந்தது.

கலையோடுகூடிய அரசியல் உணர்வை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் பார்வையாளர்களுக்குக் கடத்தின. பல்வேறு மாநிலங்களில் நடக்கும் நாடக விழாக்களுக்கும் சென்னையில் நடந்த இந்த விழாவுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. பல நாடகவிழாக்களில் மாலையிலும் இரவிலும் மட்டுமே நாடகங்கள் நிகழ்த்தப்படும். ஆனால் இவ்விழாவில் காலை 10 மணி தொடங்கி இரவு வரை நீண்டது. இதன் மூலம் அதிகமான நாடகங்களைக் காண முடிந்தது. அத்துடன், வேறு நாடகவிழாக்களில் இல்லாதபடி அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் இருந்தனர். நாடக விழாவின் முதல் நாடகமாக கவிஞர் தமிழ் ஒளி 1947-ல் எழுதிய குறுங்காவியம் ‘வீராயி’ நாடக வடிவம் பெற்று மேடையேறியது.

மேலும் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகளை நாடக வடிவில் காணவும் வாய்ப்பு கிடைத்தது.
இமையம், சுஜாதா, ஜெயமோகன், ஆதவன் தீட்சண்யா, கி.ராஜநாராயணன்,ஆகியோரின் சிறுகதைகளை நாடக வடிவத்தில் காண முடிந்தது. புரட்சிக்கவிஞர். பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’, ,கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமி அவர்கள் ஆரம்ப காலத்தில் எழுதிய ‘அப்பாவும் பிள்ளையும்’ போன்ற நாடகங்கள் மீண்டும் மேடையேற்றப்பட்டன.. ‘அவ்வை’ நாடகம் மூலம் மக்கள் கவிஞர் இன்குலாப் மேடையில் உயிர்த்து வந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

இந்தியாவின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, அதிகம் நிகழ்த்தப்பட்ட தமிழ் நாடகம் ஒன்று உண்டென்றால் அது இந்திரா பார்த்த சாரதியின் ‘ஔரங்க சீப்’ தான். இவ்விழாவில் அந்நாடகம் பார்வையாளர்களின் பெருத்த வரவேற்போடு மேடையேறியது. கன்னட நாடகமான ‘காந்தியும் அம்பேத்கரும்’, தெலுங்கு நாடகமான ‘மைதானம்’, மலையாள நாடகமான ‘மாளி’ ஆகியவை மொழித் தடையைத் தாண்டியும் பார்வையாளர்களிடையே காட்சிமொழி மூலம் தாக்கத்தை ஏற்படுத்தின.

ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு, முந்தைய நாள் நாடகங்கள் குறித்த விவாதமொன்று தொடர்புடைய இயக்குநர்கள், நடிகர்கள் பங்கேற்க சிறப்பாக நடந்தது. அறிவுப்பூர்வமான விவாதங்கள், கலை நுணுக்கமான விமர்சனங்கள் என அவ்விவாதங்கள் நாள்தோறும் மற்ற நாடகங்களைக் காண பார்வையாளர்களை தயார்படுத்தின. நாடகவிழாவின் பணிக்குழுத் தலைவரும் திரைக் கலைஞருமான ரோகிணி தனி ஒருவராக நடித்துக்காட்டிய ‘ஓராள்’ நாடகமும், திரைக்கலைஞர் குரு சோமசுந்தரம் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்வும் முத்தாய்ப்பாக நினைவில் தங்கியிருக்கின்றன.

- 4தமிழ் மீடியாவுக்காக: மாதுமை

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.