முற்றம்

அமெரிக்காவை இன்று கோரோனா தெறிக்க விடுகிறது. சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு, 19 ஆண்டுகள் அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட மற்றொரு சக்தி, டகத்தான மனித சக்தி. 01-09-1955 முதல் 30-04-1975 வரை நடைபெற்ற அமெரிக்க-வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா படு தோல்வியடைந்தது.

கிட்டத்தட்ட 19 வருட நேரடி யுத்தத்தில் அமெரிக்காவை நிர்வாணமாக்கி ஓட விட்டது ஹோசி மின் எனும் ஒப்பற்ற தலைவன் தலைமை தாங்கி நடத்திச் சென்ற வியட்நாம் தேசம்.

உலகத்திற்கே தான் மட்டுமே தாதா என அறிவிக்காமல் அராஜகம் செய்து வரும் அமெரிக்காவை வியட்நாமில் விரட்டி விரட்டி அடித்தவர் ஹோசி மின். அவரது குடும்பம் பிரான்சில் வசித்து வந்தது. அவரின் சகோதரர் பிரான்ஸ் - வியட்நாம் போரில் பிரான்சுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இது பொறுக்காத பிரெஞ்ச் அதிகார வர்க்கம் அவரை சுட்டுக்கொன்றது. அப்போது அங்கிருந்த ஹோசி மின்னை பார்த்து, 'இவனைப் பாத்தால் இன்னும் இரண்டு நாட்களில் செத்து போற மாதிரி இருக்கிறான். இவனை கொல்ல புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது' என அலட்சியமாக விட்டுச்சென்றனர். அந்த அலட்சியம்தான் அமெரிக்காவுக்கு ஆப்படித்தது. துப்பாக்கியை நிறுத்தி வைத்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் தேகம்தான் ஹோசி மின்னுக்கு. ஆனால் ஆழ்ந்த அரசியல் புலமையும்,நுண்ணறிவும்,போர்த்தந்திரமும் கொண்ட காரணத்தால் வியட்நாம் படைகளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு தேடி வந்தது.

களத்தில் நின்று மக்களை போரில் பங்கெடுக்க வைத்ததால் வெற்றியும் வசப்பட்டது. 7 மில்லியன் டன் எடையுள்ள குண்டுகளை அமெரிக்கா வியட்நாம் மீது வீசியது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசியது 2 மில்லியன் டன் குண்டுகள். மூன்று மடங்குக்கு மேல் வீசியும் வியட்நாமை அடி பணிய வைக்க முடியவில்லை அமெரிக்காவில். 58,220 அமெரிக்கர்கள் வியட்நாம் யுத்தத்தில் கொல்லப்படார்கள்.

1,50,000 பேர் காயம் பட்டார்கள். 21,000 பேர் நிரந்தரமாக கை,கால் உறுப்புகளை இழந்து சக்கர நாற்காலியில் வாழ்நாள் முழுக்க வலம் வந்தார்கள். ஹோசி மின், படை பலம் மிக்க அமெரிக்க ராணுவத்தை வீழ்த்தியது எப்படி?

தன் மக்கள் அனைவரையும் போராளியாக்கி களத்தில் விட்டார். லட்சக்கணக்கான மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் களத்தில் இறங்கி கொரொனாவுக்கு எதிராக போராடும் போது, தொலைக்காட்சியில் மட்டும் மக்கள் முன் தோன்றும் அதிபரல்ல ஹோசி மின். மக்களோடு மக்களாய் கலந்து நின்றார். போர் புரிந்தார். வென்றார்.

மக்களை விவசாயம் பார்க்கச்சொன்னார். மக்கள் விவசாயம் செய்தார்கள். அமெரிக்க ராணுவம் வந்தால் வயல் வரப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துச்சுட்டார்கள். சுடுவதற்கு விவசாயிகள் பயிற்சி பெற்று இருந்தார்கள்.

கெரில்லா யுத்தத்தில் ஹோசி மின் நிபுணத்துவம் கொண்டிருந்தார். அமெரிக்கா விமானங்களில் இருந்து குண்டுகள் வீசும் போது பதுங்கு குழிக்குள் பதுங்குவர். பதிலுக்கு பாம்புகளை அமெரிக்க ராணுவ முகாம்களில் வீசுவார்கள். அலறி ஓடும் அமெரிக்கர்களை குறி வைத்து சுட்டு பரலோகம் அனுப்பி வைப்பார்கள் வியட்நாமியர்கள். அதுமட்டுமா, விஷத்தவளைகளின் விஷம் தடவிய அம்புகள் பாய்ந்து நொடியில் உயிர் விட்ட அமெரிக்கர்கள் அநேகர். வியட்நாமின் அடர்ந்த காடுகள் கூட அமெரிக்கர்களுக்கு எதிராக சமர் புரிந்தது.

அமெரிக்கர்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதை பார்த்து அமெரிக்காவில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பணிந்தது அமெரிக்கா. சாமாதானம் பேச வந்த அமெரிக்க படைத்தளபதி மெடல்கள் பளபளக்க ராணுவ உடையில் மிடுக்காக வந்தார். ஹோசி மின் சாதாரண ரப்பர் செருப்பு அணிந்து லுங்கி கட்டிக்கொண்டு ஆயிரம் பொத்தல்கள் நிறைந்த பனியன் அணிந்து வந்தார். ஏகாதிபத்தியத்தை போர்த்தந்திரம் மற்றும் தனது தாய் நிலத்தின் புவியியல் அமைப்பால் வென்றுகாட்டிய முன்னோடித் தலைவன் உலக வரலாற்றில் ஒருவர் உண்டென்றால் அவர் ஹோசிமின்தான்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை

 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.