முற்றம்

ஐரோப்பிய நாடுகளிலுள்ள மன்னர் குடும்பங்களின் இளைய தலைமுறையினரிடத்தில் மனமாற்றங்கள் பல அன்மைக் காலங்களில் நிகழ்கின்றன. பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் பட்டத்தைத் துறந்து ஹரியும், அவரது துணைவியாரும், சாதாரண மக்களாக வாழ்வதற்கான முடிவினை எடுத்திருந்தனர். அவர்களது முடிவுக்கு மகாராணியாரும் அனுமதி கொடுத்திருந்தார்.

தற்போது உலகை ஆக்கிரமித்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்று வேளையில், மற்றுமொரு மன்னர் குடும்பத்திலிருந்து இளவரசி ஒருவர் மக்கள் சேவைக்கு வந்திருக்கின்றார். அவர் 35 வயதான சுவீடன் இளவரசி சோபியா. 2015ம் ஆண்டில் சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்துகொண்டதன் மூலம் அவர் அரச குடும்பத்தில் இளவரசியானார்.

முன்னாள் மாடல் அழகியும், தற்போதைய இளவரசியுமான சோபியா , சுவீடன் தலைநகர், ஸ்டாக்ஹோமிலுள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் தனது சேவை பணியை தொடங்கி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றாளார்களை கவனிக்கும் மருத்துவர்கள், மற்றும் தாதியர்களுக்கான உதவியாளர்களாக இணைவதற்கு தன்னார்வத் தொண்டாளர்களுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 244ஆக அதிகரிப்பு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைகிறதா ?

அந்த அழைப்பினூடு தன்னை இணைத்துக் கொண்ட இளவரசி சோபியா மருத்துவமனை ஆன்லைன் மூலம் வழங்கிய மூன்று நாள் சிறப்பு பயிற்சியினை முடித்துக் கொண்டு மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ளார். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் தொண்டு அடிப்படையிலான சுகாதார உதவியாளர்கள், கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார்கள்.

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் சீனாவில் 21 மில்லியன் மொபைல் இலக்கங்கள் மாயம் ?

சுவிற்சர்லாந்தில் ஒரு மாதகாலத்தில் 33 ஆயிரம் பேர் வேலையிழப்பு !

அதே சமயம் அவர்கள் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள். அந்த வகையில், இளவரசி சோபியாவும், சுத்தம் செய்தல், சமையலறையில் வேலை செய்தல், உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்தல் என்பது வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் எனத் தெரிய வருகிறது. இளவரசி சோபியா இரு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் அடுத்து என்ன ..?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'