முற்றம்

மனித நடமாட்டத்தையே கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடக்கி மட்டுப்படுத்தியது. ஆனால் மனித சிந்தனையை அது பல்வேறு வகையில் விரிவடையச் செய்திருக்கிறது, உறவடையச் செய்திருக்கிறது. கலைஞர்கள் சுதந்திரமானவர்கள். எந்தக் காலத்திலும் கட்டுண்டு வீழ்ந்து போகாதவர்கள்.

இலங்கையின் இசைத்துறைச் சாதனையாளர்கள் பலரும், இந்தக் கோரோனா தனிமைப்படுத்தலின் போது, தங்கள் இசையால் இணைந்து அருமையான ஒரு கானொளிப்பாடலை சென்ற வெளியிட்டுள்ளார்கள்.

இலங்கையின் முக்கிய பாடகர்களான, வி.முத்தழகு, இரகுநாதன் முதல் பல இளைய தலைமுறைக் கலைஞர்களும் அற்புதமாக இசைந்திருக்கிறார்கள். சிறுவர்களின் திறமைகளும் மிளிரும் பாடலாக வந்திருக்கும் இந்தப்படைப்பு, இலங்கைக் கலைஞர்களின் சுயவெளிப்பாட்டுத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களின் திறமை மீதான நம்பிக்கையை, கூட்டுழைப்பின் மீதான அவசியத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

இலங்கை தமிழ் இசைக்கலைஞர்கள் அமைப்பின் அனுசரனையில் உருவாகியுள்ள இப்பாடலை, சதீஸ்காந் எழுத, சமீல்.ஜே, இசை ஒருங்கமைத்திருக்கின்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் குரல் தந்துள்ளார்கள். அழகான வரிகள், அருமையான இசைக் கோர்வை,  50க்கும் மேற்பட்ட கலைஞர்களின் குரல்வரிகளை பிசிறின்றித் தொகுத்திருக்கும் கச்சிதமான காட்சித் தொகுப்பு எனச் சிறப்பாக அமைந்திருக்கிறது பாடல். எல்லாக் கலைஞகர்களது காட்சிகளும், கைபேசிவழியாகக் காட்சிப்படுத்தப்பட்டுத் தொகுக்கப்பட்டிருகிறது என்பது கூடுதல் தகவல்.

பாடலைக் குறித்து நாம் சொல்வதிலும் பார்க்க, நீங்கள் கேட்பதுவே சிறந்த அனுபவம். பாத்துக் கேட்டுவிடுங்கள்....

இதனை வாசிக்கும் நீங்கள் ஒரு இலங்கையராகவோ அல்லது இசை ஆர்வலராகவோ கூட இருக்க வேண்டியதில்லை. ஒரு கூட்டுழைப்பினை மதிக்கும் மான்பு உள்ளவராகில் இந்தக் குறிப்புக்களுடன் இந்தப் பாடலைப் பகிர்ந்தீர்களாயின், அது அவர்கள் உழைப்புக் குறித்த விளக்கத்தினையும், உயர்வினையும் மெச்சுவதாக, பாரட்டுவதாக அமையும்.

இசையால் இணைந்த சிறப்பான முயற்சியில் ஈடுபட்டுள்ள அத்துனை கலைஞர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் !

அழிவின்றி வாழ்வது நம் அன்பும் அறிவுமே : கமல்ஹாசனின் புதிய பாடல் !

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.