முற்றம்

இந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.

ஏதாவது நல்லது நடந்துருக்கும் என்று நம்புகிறீர்களா? வாருங்கள் பேசுவோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள முக்கிய தேசிய நெடுங்சாலைகள் அனைத்திலும் இப்போது மனிதத்தலைகள் தான் அதிகம் தெரிகின்றது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள்,குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்று வயது வித்தியசாமின்றி அனைவரும் நடைபாதை பயணிகளாக மாறி உள்ளனர்.

500 கிலோ மீட்டர் ஆயிரம் கிலோ மீட்டர் என்றாலும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அரசாங்கம் உதவாத காரணத்தால் நடந்தே சென்று விடலாம் என்று இன்று வரையிலும் நடந்து கொண்டேயிருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் மனதை உலுக்குகின்றது. இவர்கள் தான் இப்போது இந்திய அரசியலில் மையம் கொண்டுள்ள ஆம்பன் புயல்.

என்ன காரணம்? என்ன அரசியல்? வாங்க பேசுவோம் என அழைக்கும், திருப்பூர் ஜோதிஜியின் வாராந்தர ஆய்வின் தொகுப்பினை காட்சிப்படங்களுடன் கானொளியாகக் கீழே காணலாம்

ஜோதிஜியின் சென்ற வாரங்களிலான தொகுப்புக்கள் :

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.