முற்றம்

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

ஹாரிபாட்டர் கதைகளால் மிகவும் பிரபலமான ஜே.கே.ரவுலிங் அடுத்ததாக இக்காபாக் (The Ickabog) எனும் கதையினை எழுதிவருகிறார்.

கார்னூகோபியா என்று அழைக்கப்படும் ஒரு கற்பனை நிலத்தின் வடக்கு முனையில் வாழும் அசாதாரண சக்திகளைக் கொண்ட அசுரனைப்பற்றிய கதையே இந்த தி இக்காபாக்.

ஹாரி பாட்டர் தொடர் எழுதும் போதே தி இக்காபாக் கதைக்கான ஐடியாக்கள் இருந்ததாம். ஹாரிபாட்டரின் இருதி தொடரை அடுத்து இதனை வெளியீட ஜே.கே.ரவுலிங் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் பெரும்பாலும் கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் முடிவடைந்து அவரது அறையில் சில வாரங்களுக்கு முன்பு வரை அங்கேயே இருந்தது. சமீபத்திய வாரங்களில் அதன் பகுதிகளை மீண்டும் எழுதியுள்ளார்.

இதனையடுத்து தி இக்காபாக் முதல்பாகத்தினை லாக்டவுனால் வீட்டில் அடைப்பட்டு கிடக்கும் குழந்தைகளுக்காக இலவசமாக ஆன்லைனில் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும் ஜூலை 10 வரை ஒவ்வொரு வாரமும் மேலதிக அத்தியாயங்கள் வெளியிடப்படும் என்று ரவுலிங் ட்விட்டரில் கூறியிருள்ளார்.

இணைப்பு : The Ickabog

கோவிட் -19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு உதவும் திட்டங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அவர் தனது ராயல்டிகளை நன்கொடையாகவும் அளிக்கவுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.