முற்றம்

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

ஜூன் 03ஆம் திகதியான இன்று இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து முறையில் பெரிய இடம்பெற்றிருக்கும் சைக்கிள்கள் புகழ் கொண்டாடப்படுகிறது.

மிதிவண்டிகள் - ஒரு எளிய, சுற்றுச்சூழலுக்கு தகுந்த நிலையான போக்குவரத்து சாதனம்.

கிட்டத்தட்ட 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகி தற்போது உலகமெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை யார் முதன் முதலாக கண்டு பிடித்தார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது. எனினும் இந்த வீடியோ சைக்கிளின் பரிணாம வளர்ச்சியை அழகாக காண்பிக்கிறது.

மிதிவண்டி தினம் பிறந்தது எவ்வாறு?

இரண்டு நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மிதிவண்டியின் தனித்தன்மை, நீண்ட ஆயுள் மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஒரு எளிமையான, மலிவா, நம்பகமான, மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான போக்குவரத்து வழிமுறை ஆகும். அதோடு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது, என்பனவற்றை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியை உலக சைக்கிள் தினமாக அறிவிக்க உலக பொதுச் சபை முடிவு செய்தது.

மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், உடற்கல்வி உள்ளிட்ட கல்வியை வலுப்படுத்துதல், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோயைத் தடுப்பது, சகிப்புத்தன்மையை ஊக்குவித்தல், மற்றும் சமூக சேர்க்கையை எளிதாக்குவதற்கான வழிமுறையாக சைக்கிளின் பயன்பாட்டை வலியுறுத்தி அமைதியான கலாச்சாரத்தை கொண்டுவருவதற்கும் இந்நாள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் அபுதாபியில் பிரபல சீனக் கலைஞர் அய் வெய்வெய் அவர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சைக்கிள் வடிவமைப்பு :

கோவிட்-19 தொற்று நோய் நாம் வாழும் இந்த முறைமை மாற்றியமைத்திருக்கிறது. பெரிய பெரிய வாகனங்கள் இருக்கின்ற போது தற்போது பல நாடுகளில் உள்ள கட்டுபாடுகளினால் சற்று வெளியே செல்லவேண்டுமெனில் சைக்கிள்களில் பயணம் செய்கிறார்கள்.

பல ஐரோப்பிய நகரங்களில் உள்ள கட்டுப்பாடுகள் மோட்டார் பொருத்தப்பட்ட போக்குவரத்தை குறைப்பதற்கும், மக்கள் நெரிசலான பொது போக்குவரத்தைத் தவிர்ப்பதற்கும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதற்கும் மிதிவண்டிகளில் சவாரி செய்வதைத் தேர்ந்தெடுப்பதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக யுனைட்டன் நெசேன் தெரிவித்துள்ளது.

நகரங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்குகையில், ஏராளமான மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்கையில், சைக்கிள் மற்றும் இ-பைக் போன்றவைகளை வாங்குவதில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

உலக சைக்கிள் தினத்தில் அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசாங்கங்களுக்கு பொது இடத்திற்கு பாதுகாப்பான அணுகலை வழங்கவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களைப் பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

சைக்கிள் ஓட்டுதலுக்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய இத்தினம் பெரிதும் உதவுகிறது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..