முற்றம்

கொரானாவின் நான்காவது ஊரடங்கின் போது தமிழகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அச்சு ஊடக முதலாளிகள் ஒன்று சேர்ந்து பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும் சில முதலாளிகள் அதில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். ஒரு நூற்றாண்டுக் காலப் பாரம்பரியம் கொண்டு மக்கள் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கும் தினசரி பத்திரிக்கைகள் முதல் வாரம் தோறும் சில லட்சம் பிரதிகள் விற்கும் வார இதழ்கள் வரைக்கும் கடந்த பத்து வாரத்தில் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து விட்டன.

அச்சடித்த பத்திரிக்கைகளும், இதழ்களும் அச்சகத்திலேயே இருக்கும் சூழல் உருவானது. தடைகளைத் தாண்டி தமிழகம் எங்கும் வந்த போதிலும் கொரானா பயத்தால் விநியோகிப்பவர் யாருமில்லாமல் பத்திரிக்கைகள் அங்கங்கே விநியோகிக்காமல் தேங்கிப் போயின. பல முதலாளிகள் அழாத குறையாகப் பேட்டி கொடுத்தனர்.

எப்போதும் அரசியல்வாதிகள் தான் தங்கள் அறிக்கையைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். பத்திரிக்கைகளும் அவர்களின் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றாற் போல வெளியிடுவார்கள். ஆனால் கொரனா உருவாக்கிய அழுத்தத்தால் ஒவ்வொரு பத்திரிக்கை முதலாளிகளும் அரசியல்வாதிகளை அவரவர் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று சந்தித்தனர். காரணம் எப்படியாவது பிரதமர் மோடியிடம் சொல்லி எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி கோரிக்கை மனுவை அளித்தனர்.

இனி வரும் காலங்களில் அச்சு ஊடகங்கள் இங்கே தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதா? என்று பொது விவாதம் நடத்தும் அளவிற்குச் சூழல் மாறிக்கொண்டேயிருக்கிறது. சோசியல் மீடியா என்றழைக்கப்படும் சமூக வலைதளங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கு நடக்கும் யுத்தம் என்ன விளைவை உருவாக்கியுள்ளது? என்பதனை பற்றி இந்த வாரத்திற்கான செய்திப் பார்வையினை கானொளியாகக் காணலாம் வாருங்கள்...

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.