முற்றம்

தலைநகர் சென்னையில் கோரானாவின் கொரத்தாண்டவம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை அளவுக்கு இல்லாவிட்டாலும் சிவப்பு 4 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.

தினசரி இறப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தனை களேபரத்துக்கு மத்தியிலும் தமிழக அரசு தமிழுக்கு சேவை (?) செய்யத் தொடங்கியிருப்பது தமிழ்ப் பற்றாளர்களை ஆச்சரிப்படுத்தியிருக்கிறது.

அப்படி தமிழக அரசு என்ன செய்துவிட்டது என்கிறீர்களா? தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் வெள்ளைக் காரர்கள் காலனி ஆட்சியின்போது செய்த அட்டகாசங்களால் தலைகீழாக மாறிவிட்டன. உதாரணத்துக்கு ‘தரங்கம்பாடி’ என்பதை அவர்கள் ஆங்கிலத்தில் ‘ட்ரான்ஸ்குபார்’ என்று உச்சரித்து அதையே எழுத்தாகவும் ஆக்கிவிட்டார்கள். அதனால், இப்படி மாறிப்போன தமிழ் ஊர்களின் பெயர்களை, அவற்றின் உண்மையான தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டு அதை இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்தும் அரசு ஆணையும் வெளியிட்டிருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் இந்தப் பட்டியலில் இனி எந்த ஊர் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை வெளியிட்டிருக்கும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்களும் இதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் COIMBATORE என்று உள்ளது. இனி இதை KOYAMPUTHTHOOR என மாற்றிவிட்டதால் இந்த புதிய முறையில் எழுத வேண்டும்.

மாவட்டம் வாரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களின் விபரங்களை காணுங்கள்

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.