முற்றம்

கோரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுவதாக வரும் செய்திகளும் காணொளிகளும் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குப்பைகளில் தூக்கி வீசுவது, சவக்குழியில் மரியாதை இன்றி தள்ளிவிடுவது போன்றவை நாடு முழுவதும் நடந்துவரும் செய்திகள் தங்களை ஆதாரங்களுடன் எட்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், ‘தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலை என்ன, எவ்வளவு படுக்கைகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் மத்திய அரசுக்கும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். உண்மையில் மற்ற மாநிலங்களைச் சாடுவதைப்போல உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை டார்கெட் செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றன.

இது தொடர்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான அஸ்வானி குமார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்தும், உயிரிழந்தவர்களி்ன் உடல்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

அதனடிப்படையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது கொரோனா நோயாளிகள் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு அரச மருத்துவமனைகளில் மோசமாக நடத்தப்படுவது பற்றியும், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைகளில் பாதுகாப்பற்று போட்டு வைத்திருப்பதையும் சவக் குழிகளில் உடல்களை மரியாதக் குறைவுடன் வீசுவது பற்றியும் நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவ்வழக்கில் பல கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் குழு, “ மகாராஷ்டிரா மற்றும் தமிழநாட்டில் கொரோனா பரிசோதனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்போது டெல்லியில் மட்டும் பரிசோதனை அளவு குறையக் என்ன காரணம்? பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள். ஒரு புறம் கரோனாவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதைப் பார்க்கிறோம். கொரோனா நோயாளிகள் நாள்தோறும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கக்கூட ஒருவரும் இல்லை.

கொரோனா வைரஸைத் தடுப்பது குறித்து மத்திய அரசு வகுத்த வழிகாட்டி நெறிமுறைகளை டெல்லியில் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை. டெல்லியில் உள்ள சூழல் அச்சுறுத்தலாக, கொடூரமாக, பரிதாபமான நிலையில் இருக்கிறது. கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசாக நடத்தப்படுகிறார்கள். டெல்லியில் உள்ள மருத்துமனை நிலவரத்தைச் சொல்லவே வருத்தமாக இருக்கிறது. கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உயிரிழந்தவர்களின் உடலைக் கையாளுதல் போன்றவை கவலையளிக்கும்விதமாக இருக்கின்றன.

மேலும் கோரோனாவால் ஒரு நோயாளி இறந்துவிட்டால், அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்தாருக்கூட தகவல் சொல்வதில்லை. சில நேரங்களில் நோயாளியின் உறவினர்களைக் கூட இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிப்படுவதில்லை. டெல்லி மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக இருந்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர நோயாளிகள் அலைபாய்கிறார்கள். எங்களுக்குக் கிடைத்த செய்திகள் அடிப்படையில் டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல்கள், நடைபாதையிலும், காத்திருப்பு அறையிலும் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே இருக்கின்றன. ஆனால், கரோனவில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அனுமதிப்பதில்லை.

ஒரு மாநில அரசின் கடமை என்பது நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகளை மட்டும் உருவாக்குவது அல்ல, மருத்துவ கட்டமைப்பு, மருத்துவர்கள், ஊழியர்கள் அனைத்தையும் ஏற்படுத்த வேண்டும். டெல்லி மருத்துவமனைகள் மட்டுமல்ல மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட மோசமானநிலைதான் நிலவுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் எந்த அளவுக்கு உள்ளன, மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை விளக்க நோட்டீஸ் அளிக்க உத்தரவிடுகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை அடுத்த வாரம் மீண்டும் விசாரிக்கிறோம்”. என்று நீதிபதிகள் தெரிவித்து கெஜ்ரிவாலுக்கு கிலியூட்ட முனைந்திருக்கிறார்கள். ஆனால் சலசலப்புக்கு அஞ்சுகிறவரா கெஜ்ரிவால்?

- 4தமிழ்மீடியாவுக்காக : மாதுமை

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.