முற்றம்

ஜூன் 14ம் தேதியான இன்று பாதுகாப்பான இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானாக முன்வந்து இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக சுகாதார நிறுவனம் 'WBDD' என அழைக்கப்படும் உலக குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடிவருகிறது.

ஒவ்வொரு மக்களும் உலமெங்கும் ஏபிஓ இரத்தக் குழு முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டீனரின் பிறந்தநாள் விழாவிலிருந்து இத்தினத்தை கொண்டாடடிவருகிறார்கள்.

இந்த ஆண்டின் உலக குருதிக் கொடையாளர் தினத்தின் கருப்பொருளாக “பாதுகாப்பான இரத்தம் உயிர்களைக் காப்பாற்றுகிறது” மற்றும் “இரத்தத்தைக் கொடுங்கள், உலகை ஆரோக்கியமான இடமாக மாற்றுங்கள்” என்ற வாசகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தினத்தில் முக்கியமாக அறிந்திருக்கவேண்டிய சில விடயங்கள் :

இரத்த தானம் செய்வதன் நன்மைகள்:

1. எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது

2. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

3. புற்றுநோயை விலக்கி வைக்கிறது

4. மென்மையான சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது

5. உணவின் கலோரினை குறைக்கிறது.


இரத்த தானம் செய்வதற்கான அளவுகோல்கள் என்ன?

1. குருதிக்கொடையாளர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மேலும் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது.

2. குருதிக்கொடையாளரின் வயது மற்றும் எடை 18-65 வயது இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.

3. இதய துடிப்பு வீதம்; முறைகேடுகள் இல்லாமல் 50 முதல் 100 வரை இருத்தல் சிறந்தது.

4. ஹீமோகுளோபின் நிலை; குறைந்தபட்சம் 12.5 கிராம் / டி.எல் இருத்தல் அவசியம்

5. இரத்த அழுத்தம்; டயஸ்டாலிக்: 50–100 மிமீ எச்ஜி, சிஸ்டாலிக்: 100-180 மிமீ எச்ஜி.

6. உடல் வெப்பநிலை; வாய்வழி வெப்பநிலை 37.5. C க்கு மிகையில்லா சாதாரணமாக இருக்க வேண்டும்.

7. அடுத்தடுத்த இரத்த தானங்களுக்கு இடையிலான காலம் 3 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும்.

உங்களால் முடிந்தால் இத்தகவல்களை மற்றவர்களும் பயன்படும்படி பகிரங்கள்; குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வை அனைவரிடத்திலும் கொண்டு சேருங்கள்.

source : english.jagran

 

மேலும் சில நாட்கள் :

உணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்

இன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்

உலக சுற்றுச்சூழல் நாள் இன்று : வீடியோ

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்

இன்று உலக செவிலியர் நாள் !

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.